Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வடபோர் முனையில் சிறிலங்கா படையணிகளில் புதிய நியமனங்கள்
Date&Written by: (18.11.2007- Delan)

வடபோர் முனையில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காப் படையணிகளில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விபரங்கள்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 57 ஆவது தாக்குதல் படையணியை இராணுவம் உருவாக்கியதானது வன்னி மீதான பெரும் படை நடவடிக்கை ஒன்றிற்கான அறிகுறிகளை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் மணலாறில் 59 ஆவது படையணியும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அங்கும் முக்கியமான களமுனை திறக்கப்படலாம் எனக் கருதப்பட்டது.

59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் நந்தா உடுவத்த (கவசப் படையைச் சேர்ந்தவர்) நியமிக்கப்பட்டுள்ளதுடன்,

51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பி.டபிள்யூ.பி.ஜெயசுந்தர (பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்தவர்), மணலாற்றின் பிரதிக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிக்கேட்டின் கட்டளைத் தளபதியாக லெப். கேணல் சி.கே. கோஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிக் கட்டளைத் தளபதிகள் டிவிசன் படையணிகளுக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

மாணலாற்றில் மட்டுமல்லாது,

முகமாலை, வவுனியாப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையணிகளுக்கும் பிரதிக் கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

52 ஆவது படையணியின் 3 ஆவது பிரிக்கேட்டின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் எஸ்.பி.ரீ.லியனகே (கவசப்படையைச் சேர்ந்தவர்), முகமாலையில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியாகவும்

யாழ். குடாநாட்டின் இராணுவத்தின் அதிகாரிகள் பணியக அதிகாரியான பிரிகேடியர் இசற். விக்ரமரட்ன (பீரங்கிப் படையணியைச் சேர்ந்தவர்), வவுனியாவில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியாகவும் நியமிக்கப்படடுள்ளார். இசற் விக்ரமரட்னவின் இடத்திற்கு படையினரின் சமிக்ஞைப் பிரிவில் பணியாற்றிய கேணல் ஏ.ஆர்.றொவலும், பிரிகேடியர் லியனகேயின் இடத்திற்கு லெப்.கேணல் பி.ஐ.பத்திரன (கெமுனுவோச்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணலாற்றில் நிலைகொண்டுள்ள படையணிக்கு பிரதிக் கட்டளை அதிகாரியும் மூன்று பிரிகேட் கட்டளை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லெப்.கேணல் ஏ.எஸ்.ஆரியசிங்க (பீரங்கிப் படையணியை சேர்ந்தவர்) 59 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டின் கட்டளை தளபதியாகவும்,

லெப்.கேணல் எச்.எம்.பீற்றர் சில்வா (சிங்க றெஜிமென்ட்டைச் சேர்ந்தவர்) 59 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாகவும்,

லெப்.கேணல் கே.எச்.பி.பி. பெர்ணான்டோ (சிங்க றெஜிமென்ட்டைச் சேர்ந்தவர்) 59 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களுக்காக நவம்பர் 14 மற்றும் 16 ஆம் நாட்களில் இராணுவத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் சுனில் டீ சில்வா கையெழுத்திட்டுள்ளார்.

55 மற்றும் 57 ஆவது படையணிகளுக்கு பிரதிக் கட்டளைத் தளபதிகளை நியமித்ததன் மூலம் வன்னி மற்றும் வடக்குப் பகுதி மீதான படை நடவடிக்கைகள் உக்கிரமடையப் போவதை இராணுவத்தளபதி உணர்த்தியுள்ளார்.

59 ஆவது படையணி உருவாக்கப்படுவது மணலாற்றுப் பகுதியில் படை நடவடிக்கை உக்கிரமடையப் போவதையும் எடுத்துக் காட்டியுள்ளது.

இராணுவம் தனது திட்டங்களின் அடிப்படையின் செயலாற்றி வருகின்றது. ஆயிரக்கணக்கான படையினர் பல முனைகளில் களங்களை திறக்கலாம். தற்போதைய பருவ மழையினால் படையினர் தமது கவசப்படையை பயன்படுத்த முடியாது உள்ளது. ஆனால் பருவமழை முடிவடைந்ததும் படையினர் தம்மிடம் உள்ள முழு வளத்தையும் பயன்படுத்தி வன்னி மீதான தாக்குதலை தொடங்கலாம்.

எனினும் படையினர் வடபகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் நாள் முகமாலையில் நடைபெற்ற கடும் சமரில் அழிவுகள் ஏற்பட்ட போதும் படையினரின் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

நேற்று சனிக்கிழமை 4 ஆவது கெழுனுவோச் படையினரும், வெள்ளிக்கிழமை 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையினரும் நாகர்கோவில் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் படையினரின் நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டில் உள்ள சில பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான முயற்சிகளை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மேற்கொண்டுள்ளார்.

வன்னிப் பகுதியில் கடுமையான வான் தாக்குதல்களும் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்னிப் பகுதி மீதான படை நடவடிக்கைகளில் படையினரின் சிறப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் வன்னிப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தலலைமையில் பிரிகேடியர்கள் ஜெகத் டயஸ், சவிந்ரா சில்வா, நிர்மல் தர்மரட்னன, ஜெகத் ரம்புக்கோத்த ஆகியோரால் வழி நடத்தப்படுகின்றது. நேற்று வன்னிப் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு களநிலமைகள் தொடர்பாக ஜெயசூர்ய விளக்கி கூறியிருந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.