Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அதிகார வெறியில் எல்.ரி.ரி.ஈ.யின் முன் மண்டியிடும் அரசியல் போக்கிரிகள்: தொகுப்பு- அபூநுஹா
Date&Written by: (17.11.2007- PostMaster)

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தற்போது ஒரு அரசியல் நெருக்கடி நிலைமையைத் தோற்றுவிப்பதற்கான ஒரு சில சக்திகளின் முயற்சிகள் அரங்கேறிக் கொண்டிருப்பதைத் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே வரவு-செலவுத்திட்டத்தின் போது அரசாங்கத்தை தோற்கடிக்கும் முயற்சியை ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் ரீதியாக முன்னெடுத்துள்ளது. மறுபுறத்தில் வடக்கு களநிலைமைகளில் பெரும் மோதலொன்றைத் தோற்றுவித்து, புலிகளின் கை ஒங்கியிருப்பதான தோற்றப்பாடொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கை அழி;ப்பதும் அந்த நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு விடயமாகும். அதன் மூலம் அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பெரும் பலாபலன்களை ஈட்டிக் கொள்வதும், இராணுவத்தினரின் மனோவலிமை மற்றும் மக்கள் மத்தியில் அவர்கள் பெற்றுள்ள கதாநாயக அந்தஸ்தை சீர்குலைப்பதும் மேற்குறித்த சதிகாரர்களின் பிரதான நோக்கமாகும். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரசியல் ரீதியில் பலவீனப்பட்டு, நாளுக்கு நாள் உட்கட்சி மோதல்களால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியை எந்த வழியிலேனும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதே இ;வ்வாறான சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.

அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு அம்சம் தானே, அதற்குப் போய் இப்படி ஒரு வியாக்கியானம் அளிப்பது எந்த வகையில் நியாயம் என்று ஒரு கேள்வியை யாரும் எழுப்பலாம். மேலோட்டடமாகப் பார்க்கும் போது அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால் சமகால சம்பவங்களைப் பட்டியலிட்டுப் பார்க்கின்றவர்கள் எனது மேற்கண்ட கருத்துடன் நிச்சயமாக ஒத்துப் போகவே செய்வார்கள். ஏனெனில் அரசியல் ரீதியான மேலோட்டமான அறிவைக் கொண்டிருக்கும் எவருக்கும் கூட அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு வருவது கடினமான விடயமல்ல.

உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்று வரும் மாற்றங்கள், அதன் பின்புலம் என்பவற்றைக் கருத்திற் கொண்டால் இனி வரும் காலங்களில் புலிகள் எந்த வகையிலும் தலையெடுக்க முடியாத சூழல் உருவாகி வருகின்றமையை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மீதான அமெரிக்கத் தடை உணர்த்துகின்றது. அதனையொட்டியதாக நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில் அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெளிவாகவே விளக்கி விட்டார். அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்பது தான் அந்த தெளிவான நிலைப்பாடாகும். அதன்படி நாடாளுமன்றக் கதிரையின் சொகுசுக்காக புலிகளே தமிழர், தமிழரே புலிகள் என்ற கூட்டமைப்புக் கூத்தாடிகளின் பித்தலாட்டம் இனி சர்வதேச அரங்கில் செல்லாக் காசாகப் போகின்றது. மறுபுறத்தில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகள் எவ்வழியிலாவது முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்தின் நிலைப்பாடாக உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே திருமலைத்துறைமுகத்தில் வைத்து இலங்கைக் கடற்படையினருக்கு ரேடார் தொகுதிகள் கொண்ட படகுகள் வழங்கப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தெளிவாகவே கூறிவிட்டார். அதாவது இது காலவரையும் செய்மதித் தகவல்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பவற்றை மட்டுமே இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வந்த அமெரிக்கா, இனி வரும் காலங்களில் அதி நவீன போரியல் கருவிகளையும் வழங்கி பயங்கரவாதத்தைக் கருவறுக்க, இலங்கையுடன் கைகோர்க்கப் போகின்றது என்பதைத் தெளிவாகவே கோடி காட்டி விட்டது. மறுபுறத்தில் இது கால வரையும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் எட்ட நின்று ஆலோசனைகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருந்த இந்தியாவும் இப்போது பகிரங்கமாகவே ஆயுத உதவிகளை வழங்கத் தீர்மானித்திருப்பதை அண்மையில் பதவியேற்றுக் கொண்டுள்ள இந்தியாவின் புதிய இராணுவத் தளபதி தீபக் கபூர் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறான விடயங்கள் எல்லாம் புலிகளைப் பொறுத்தவரை மரண அடி விழப்போவதற்கான முன்னெச்சரிக்கை விடுப்புகளாகவே கருதப்படுகின்றது.

எனவே அவ்வாறான ஆபத்தான கண்டத்திலிருந்து தப்பிப் பிழைப்பதாக இருந்தால், புலிகள் முன் இரண்டு வழிகள் மாத்திரமே இருக்கின்றன. முதலாவதாக சமாதானப் பேச்சுவார்த்தை என்ற தெரிவைப் பொறுத்தவரை புலிகள் அதற்கு இன்றைய சூழ்நிலையில் இணங்கிப் போவதென்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும். ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் போன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களை வீரப்புருஷர்களாக சித்தரித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த அரசாங்கத்திடம் புலிகளுக்கு கிடைக்காது. அடுத்ததாக, சமாதானப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, சமாதானப் பேச்சுவார்த்தை சீர்குலைந்து போய் விடக்கூடாது என்பன போன்ற வாதங்களை முன்வைத்து புலிகளின் கோரிக்கைகளையும், தேவைப்பாடுகளையும் நிறைவேற்றிக் கொடுக்க இன்றைய அரச தலைவர் தயாராக இல்லை என்பது புலிகளுக்கு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் நன்குணரப்பட்ட விடயமாகும். எனவே சமாதானப் பேச்சுவார்த்தை என்ற தெரிவு புலிகளைப் பொறுத்தவரை வேப்பங்காய் போன்று கசப்பானதாகும்.

அடுத்ததாக அவர்கள் முன்னுள்ள தெரிவு என்னவெனில் பதவியிலிருக்கும் ;அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் தமது நேச அணியினருடனான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கூட்டுச்சேர்வதாகும். அதனைத் தான் புலிகள் இப்போது தெரிவு செய்துள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவதற்கான பொன்னான வாய்ப்பு அதுதான். தமது கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கை முழுமையாக விடுவித்து அதன் மூலம் தமது முதுகுத்தண்டையே முறித்துப் போட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, அவருக்கு ஒரு பாடம் புகட்ட இதை விட்டால் அவர்களுக்கு வேறு சந்தர்ப்பமே கிடைக்காது. ஏனெனில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு ஜனநாயக ரீதியான தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதை ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும் புலிகள் நண்குணர்ந்து வைத்துள்ளார்கள்.எனவே இவ்வாறான ஒரு தருணத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கைகொடுப்பதன் மூலம் தமக்கு எதிரான அரசாங்கத்தைப் பதவியில் இருந்து அகற்றி, தமது நேச சக்தியை பதவிக்குக் கொண்டுவருவதானது, தமிழ் ஈழம் தொடர்பிலான அவர்களின் பாசிசக் கனவு எப்படிப் போனாலும் கோடிக்கணக்கிலான கப்பம் வருமானத்துக்கு வழிகோலும் என்பது பாசிசப் பிரபாகரனின் திட்டமாகும். கிழக்கு மீட்கப்பட்டுள்ளதன் காரணமாக மாதாந்தம் புலிகள் இழந்துள்ள கப்பத் தொகையின் பெறுமதி மட்டுமே சுமார் பதினைந்து கோடி ரூபா என்பதை அண்மையில் ஈரோஸ் முக்கியஸ்தரான வே.பாலகுமாரன் தனது இந்திய நண்பர் ஒருவருடனான உரையாடலின் போது தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். அதன் காரணமாவே தமிழ்ச்செல்வனின் மரணத்தை வைத்து தமிழகத்தைத் தமது கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவையும் தமது வலைக்குள் வளைத்துப்போட புலிகள் பகீரதப் பிரயத்தனம் எடுத்தார்கள். அதன் மூலம் குறைந்த பட்சமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து வைத்த இந்தியாவின் தீர்வுத்திட்டத்தையே அரசாங்கம் கிடப்பில் போட்டு விட்டதாகக் கூறி தம் மீதான அனுதாபத்தையேற்படுத்திக் கொள்ளும் அவர்களின் முயற்சி பிரபாகரன், பாலகுமாரன் போன்றோரின் சொற்படி ஆடமுற்பட்ட வைகோ வின் சிறைவாசத்துடன் தோல்வியில் முடிவடைந்துள்ளது. எனவே இருக்கின்ற ஒரே வழி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்து, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அவர்களின் ஆசியுடன் தமது வலைப்பின்னலை வலுப்படுத்திக் கொள்வது மட்டுமே. அதற்கான முயற்சிகளையே அவர்கள் இப்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான அவர்கள் கையாளும் பிரதான வழிமுறை என்னவெனில், அரசாங்கத் தரப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை எதிரணி; பக்கம் தாவ வைத்து அதன் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாகும்.

புலிகளுக்கும் அவர்களது கூத்தாடிகளுக்கும் எப்போதும் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதென்பது கைவந்த கலையாகும் என்பதற்கு கீழ்வரும் விடயங்கள் சாட்சியாகும். அதாவது ஜெனீவா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்குமாறு தமக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தமது அபிமானிகளிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதை அங்கிருக்கும் முன்னாள் உறுப்பினர் ஒருவர் எனது நண்பர் என்ற வகையில் என்னிடம் தெரிவித்தார். அதனை பொய்யென எவரும் வாதிட்டால் ஆதாரங்களுடன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஒலிப்பதிவுடன் அதனை நிரூபிக்கத் தயார் என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மறுபுறத்தில் தாம் மீண்டும் பதவிக்கு வந்தால் சமாதான ஒப்பந்தத்தை மீளவும் அமுல்படுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க புலிகளிடம் வாக்களித்துள்ளார் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வாயிலிருந்தே வெளிப்பட்ட விடயங்களாகும். அது மட்டுமன்றி 2005ம் ஆண்டுக்கு முன்னர் புலிகளின் பிடியிலிருந்த பிரதேசங்களை படிப்படியாக அவர்களிடமே மீண்டும் கையளிக்க ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருப்பதாகவும் கூத்தமைப்பினர் பெருமையடித்துக் கொள்கின்றனர். இராணுவத்தின் புலனாய்வுத்துறையைக் காட்டிக் கொடுத்தவரும், பிரேமதாச அரசாங்கத்தின் மூலம் புலிகளுக்கு ஆயுதம் வழங்கும் கலந்துரையாடல்களின் போது பிரதான பங்கெடுத்தவருமான ரணில் விக்கிரமசிங்க தனது பதவிப் பேராசைக்காக அவ்வாறான நிபந்தனைகளையேற்று புலிகளின் முன் மண்டியிடுவது ஒன்றும் வியப்பான விடயமல்ல என்பதை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்று வெளிநாட்டில் வாழும் ஒரு முன்னாள் முக்கியஸ்தரும் தமது அனுபவங்கள், தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்கள் என்பவற்றின் மூலமாக உறுதி செய்துள்ளார். எனவே இவ்வாறான நிலையில் எந்த வழியிலேனும் அரசாங்கத்தைக் கவிழ்க்க புலிகள் முயற்சிகளை மேற்கொள்வதில் வியப்பேதுமில்லை தானே.

அதே நேரம் அவர்கள் தூர இருந்து அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை வெறுமனே பார்த்திருக்க மட்டும் தயாராக இல்லை. தும்முடைய நேரடிப் பிரதிநிதி ஒருவரையும் அதற்காக அவர்கள் நியமித்துள்ளார்கள். சண்முகலிங்கம் என்றொருவரை தமது பிரதிநிதியாக நியமித்து, அரசுத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை வீசிப்பார்த்தார்கள். ஆனால் புலிகளின் பிரதிநிதியிடம் சோரம் போக எவரும் விரும்பாத காரணத்தால், அடுத்ததாக அவர்கள் கையாண்ட வழிமுறை தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களிடம் பெருந்தொகைப் பணத்தைக் கையளிப்பதாகும். அதன் மூலம் அவரே நேரடியாக அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை விலைக்கு வாங்கி அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள். அதுவும் இப்போது வில்லங்கத்தில் மாட்டியுள்ளது. புலிகள் கொடுத்த மில்லியன் கணக்கிலான டொலர்களை ரவி கருணாநாயக்க தமது இஷ்டம் போல தனிப்பட்ட தேவைகளுக்காகச் செலவழிக்கத் தொடங்கியது மாத்திரமன்றி, அந்தப் பணத்தை யார் கையிலும் கொடுக்காமல் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார். அது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் மலிக் சமரவிக்கிரம மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கிடையில் கருத்து மோதலொன்று வலுப்பெற்றுள்ளது. அது மாத்திரமன்றி அந்தப் பணத்தில் தனக்கும் ஒரு பங்கு கிடைக்காத காரணத்தினால் மலிக் சமரவிக்கிரம விடயம் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிசாரின் காதில் போட்டு விட்டார். இப்போது ரவி கருணாநாயக்க பொலிசாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளார். வழக்கு விசாரணை முடிவானது பெரும்பாலும் ரவி கருணாநாயக்கவை சிறையில் தள்ளுவதாகவும், பயங்கரவாதத்துக்குத் துணைபோன குற்றச் சாட்டில் அவரது குடியுரிமை பறிக்கப்படுவதாகவும் கூட இருக்கலாம்.

இன்னொரு புறம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் புலிகளின் முயற்சி அவர்களது தலையாட்டி பொம்மைகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மத்தியிலேயே புகைச்சலையும், உட்கட்சிக் குழப்பத்தையும் தோற்றுவித்துள்ளது. ஏனெனில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வரும் பட்சத்தில் இப்போது இருக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் இடமளிக்க மாட்டார்கள். அதே போல அப்படியே இடம் கிடைத்துப் போட்டியிட்டாலும் அவர்களால் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் 2004ம் வருட பொதுத் தேர்தலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கள்ள வாக்கு வேட்டை சர்வதேச ரீதியாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். தாம் மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென்ற அதிகார மோகத்தில் அப்போது பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் அவர்களின் கள்ள வாக்கு வேட்டைக்கு வசதியாக இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை நிறுவியது. அதன் மூலம் மரணித்தவர்களும், புலம் பெயர்ந்து போனவர்களும் வாக்களித்த அதிசயம் உலகிலேயே இலங்கையில் மட்டும்தான் நடந்தேறியது. ஆனாலும் 2005ம் வருட ஜனாதிபதித் தேர்தலின் போது இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மட்டுமே வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புலிகள் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரினார்கள். ஏனெனில் நீதியான ஒரு தேர்தலின் போது மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் செல்வாக்கு என்னவென்பது உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் வெளிப்பட்டு, தமது ஏகபிரதிநிதித்துவ வெறியாட்டம் முடிவுக்கு வந்து விடும் என்பதன் காரணமாகவே பிரபாகரன் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டதாக தமிழ்ச்செல்வன் தனது வாயாலேயே ஒப்புக் கொண்டதாக சினமாத்துறை முக்கியஸ்தர் ஒருவர் தமது நெருங்கியவர்களிடம் பிரஸ்தாபித்துள்ளார். கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது விடயம் அப்பட்டமான உண்மை என்பது எவருக்கும் இலகுவில் புலப்படும். அப்படியான ஒரு சூழ்நிலையில் வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் பலர் இனியொரு தேர்தலின்போது மக்களால் நிராகரிக்கப் படலாம் என்ற அச்சம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

அது மாத்திரமன்றி கிழக்கிலும் அதே நிலைதான். ஏனெனில் கிழக்கு முழுமையாக விடுவிக்கப் பட்டுள்ள சூழ்நிலையிலும், பல்வேறு நொண்டிச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டு கொழும்பிலிருந்து கொண்டு அரசியல் பிழைப்பு நடாத்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலின் போது முகவரியற்றுப் போவது நிச்சயம். ஏனெனில் அங்கே வலுவாகக் காலூன்றியிருக்கும் மாற்றுக் கருத்துடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான அதாவுல்லா, அமீர்அலீ, டக்ளஸ் தேவானந்தா, மற்றும் ஏனைய அமைப்புகளான ஈ.பீ.ஆர்.எல்.எப்., புளொட் என்பவற்றின் செல்வாக்குக்கு முன்னால் அவர்களால் தாக்குப் பிடிக்கவே முடியாது என்பது தெளிவான விடயமாகும்.

இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த கருத்து முரண்பாடுகளை எதிர்வரும் நாட்களில் இடம்பெறப்போகும் நிகழ்வுகளின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். ஆனாலும் ஒரு சில கூட்டமைப்பினர் மட்டும் முல்லைத் தீவை மட்டுமாவது காப்பாற்றிக் கொண்டால் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நோக்கில் யானை புலி சூழ்ச்சியில் பங்காளர்களாக மாறித் தலையாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியான சூழ்நிலையில் புலிகளினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் கனவு எந்தளவு தூரம் சாத்தியப் படப் போகின்றது என்பதை இனிவரும் ஓரு சில நாட்கள் தீர்மானிக்கப்போகின்றன.

அல்லது இப்போது நடந்து கொண்டிருப்பதைப் போலவே தொடர்ந்தும் சகுணம் பிழைத்து ரணிலின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் பறிபோகப் போகின்றதோ தெரியாது. அப்படி நடக்கும் பட்சத்தில் பிரபாகரன் முல்லைத்தீவையும், ஈழக் கனவையும் பறிகொடுத்து விட்டு, கைசேதப்பட்டுக் கவலைப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லையென்றே தோன்றுகின்றது.
Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.