Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அனுராதபுரம் தாக்குதல் குறித்து மகா நெகுமா திட்டத்தின் பணிப்பாளரிடம் விசாரணை
Date&Written by: (18.11.2007- Delan)

அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரான கீத்சிறீ அபயகுணவர்த்தனவிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி விபரம்:

அனுராதபுரம் வான் படைத்தளத்தின் விரிவாக்கத்தில் பணியாற்றிய ஒப்பந்ததாரர்கள் அவர்களின் துணை ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளவில்லை. அவர்களே விடுதலைப் புலிகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கியிருக்கலாம்.

கூகிள் இணையத்தளத்தின் மீதே வான்படையினரும், குற்றப் புலனாய்வுத்துறையினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அமைச்சின் இணைப்பு செயலாளரினால் இந்த நடவடிக்கையில் 164 பணியாளர்களும், 94 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. வீதி, அபிவிருத்தி அமைச்சின் இணைப்பு செயலாளர் கைது செய்யப்படலாம் என கடந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் குற்றப் புலனாய்வுத்துறையினரும், அரச தலைவர் பாதுகாப்புப் பிரிவினரும் "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரான கீத்சிறீ அபயகுணவர்த்தனவை விசாரணை செய்திருந்தனர்.

அவர் மகிந்த ராஜபக்சவின் கீழ் வரும் தேசியக் கட்டுமான அமைச்சின் வேலைகளின் இணைப்பதிகாரி ஆவார். அவரிடமே அனுராதபுரம் வான் படைத்தளத்தின் விரிவாக்க திட்டம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏ.என்.ரி போக்குவரத்து நிறுவன முகவரான ஏ.என் தனநாயகம் என்பவரை அபயகுணவர்த்தனவுக்கு தெரியும். தனநாயகம் வன்னிப் பகுதிக்கு பொருட்களை அனுப்புபவர்.

அபய குணவர்த்தனவுக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த பிரதீபனை தனநாயகம் அறிமுகப்படுத்தியிருந்தார். பிரதீபனுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உண்டு. பிரதீபனிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டதுடன் அவருக்கு உப ஒப்பந்தமும் வழங்கப்பட்டது.

அபய குணவர்த்தனவுக்கும், தனநாயகத்திற்கும் இரவு விடுதிகளுக்கு செல்லும் பழக்கம் உண்டு. இந்த நிலமையில் அத்துருகிரியா மிலேனியம் சிற்றி முகாமைச் சேர்ந்த ஒருவர் நண்பரானார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரே கருணா குழுவினர் என்ற போர்வையில் அபய குணவர்த்தனவிடம் வாகனச் சாரதியாக சேர்ந்துதிருந்ததாக பின்னர் அறியப்பட்டிருந்தது. லெஸ்லி அலக்சாண்டர் சேக்ஸ்பியர் என்ற பெயருடயை அந்த நபர் அபயகுணவர்த்தனவின் 253-9297 என்னும் இலக்கமுடைய பிக்கப் வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றி வந்தார்.

வவுனியாவிற்கான மூன்று பயணங்களின் போது அவர் தனது வாகனத்தை சோதனையிட அனுமதிக்காதது இராணுவப் புலனாய்வுத்துறையினருக்கு சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது. அபயகுணவர்த்தனவுடன் பணியாற்றுவதாக அவர் வீதிச் சோதனைச் சாவடிகளில் தெரிவித்திருந்தார்.

வீதி அதிகார சபையிடம் 3 வாகனங்கள் இருந்ததுடன், அவை பின்னர் மறைந்து போய்விட்டன.

16-580 இலக்கமுடைய மஸ்டா 323 வாகனம் அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு 150,000 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

18-1965 இலக்கமுடைய நிசான் சன்னி வானகமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

54-8413 இலக்கமுடைய இசூசு பிக்கப் வகை வாகனமும் காணாமல் போனதுடன் பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டது.

கேணல் மீடினின் கொலையுடன் தொடர்புடைய ஜஸ் மஞ்சு, கீர்த்தி பண்டாரா உள்ளிட்ட 11 பேர், வீதி அதிகார சபையில் பணியாற்றியுள்ளனர். அபயகுணவர்த்தனவுக்கு மகிந்த ராஜபக்சவுடனும் தொடர்புகள் உண்டு.

முன்னாள் அரச தலைவர் பிரேமதாசாவின் கொலையில் சம்மந்தப்பட்ட பாபுவுக்கு பிரேமதாசாவுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடன் மகிந்தவின் தொடர்புகள் அதிகமாக இருப்பதனால் அவர் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

இது தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரச தலைவர் மாளிகைக்கு அருகில் இருந்த பொதுமக்கள் தொடர்பகம், பணிப்பாளர் நாயகம், வஜிர இருகல்பண்டாரா ஆகியன மூடப்பட்டுள்ளன.

எனினும் அதற்கு அண்மையில் உள்ள அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக தெளிவாக தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.