Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ரணிலுடன் மகிந்த நடத்திய "பிரதமர்" பேரம்
Date&Written by: (18.11.2007- Guruparan)

சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பாரியார் எலீனாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற போதும் ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான "பேரம்" குறித்து விவாதித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் அருகருகே அமர்ந்திருந்து சுமார் 20 நிமிடங்கள் வரை உரையாடினர்.

வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என்றும் விரும்பினால் உங்களுடன்) சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பேன் என்றும் ரணிலிடம் கூறியுள்ளார்.

மேலும் ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதாகவும் மகிந்த "பேரம்" பேசியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதனால் தேர்தலில் நின்று அப்பதவியை பெற்றுக்கொள்வேன். மாறாக இப்படியான தேசிய அரசு அமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று மகிந்த ராஜபக்சவின் முகத்திலடித்தாற்போல் கூறியிருக்கிறார். ரணிலின் இந்த பதிலால் மகிந்த ராஜபக்சவின் முகம் திடீரென வெளிறிப்போனதாக அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.