Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

இரு அணிகளும் மகிந்த ரட்ணதிலக்க - விஜயதாசவுக்கு வலை
Date&Written by: (17.11.2007- Guruparan)

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச பக்கம் தாவிய மகிந்த ரட்ணதிலக்கவுக்கும் அரச பக்கத்திலிருந்து எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்சவையும் மீண்டும் தங்கள் அணிகளிலே தக்க வைக்க இரு அணிகளும் வலை வீசி வருகின்றன.

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி அறை ஒன்றில் இன்று சனிக்கிழமை ஐ.தே.க.வின் லக்ஸ்மன் செனிவிரட்ன தலைமையிலான குழுப் பேச்சுக்களை நடத்தியது.

இதே போல் கொழும்பில் மற்றொரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச, மீண்டும் அரசாங்கம் பக்கம் திரும்பி விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் ஐ.தே.க. அச்செய்தியை மறுத்துள்ளது.

அதே நேரத்தில் மகிந்த ராஜபக்சவை, விஜயதாச ராஜபக்ச இன்று சனிக்கிழமை காலை அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியதாகவும் தமக்குரிய "பேரம்" எது என்று இச்சந்திப்பில் விஜயதாச ராஜபக்ச கூறியதாகவும் தெரிகிறது. விஜயதாச ராஜபக்சவை மீண்டும் அரசாங்கம் பக்கம் கொண்டு வரும் "தரகு"ப் பொறுப்பு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயிடம் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் திடீரென இன்று மாலை 5:00 மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவையும், விஜயதாச ராஜபக்சவையும் சந்தித்தார். இதனால் ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்ச, ஜெயராஜ் பெர்னாண்டோ மூலமாக ஒரு கடிதம் ஒன்றை விஜயதாச ராஜபக்சவிடம் கொடுத்து அனுப்பினார்.

இருவருக்கும் விரிக்கப்படும் வலையில் வீசப்படும் "பேரங்க"ளில்தான் எந்த அணி என்று தீர்மானிக்கப்படும் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.