Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வரவு-செலவுத் திட்டத்தை புறக்கணிக்கிறது ஜே.வி.பி?
Date&Written by: (17.11.2007- Ranan)

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த வருமாறு மகிந்த எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பேச்சுக்கள்- ஆலோசனைகளை நாம் விரும்பவில்லை. செயற்பாடுகளையே விரும்புகிறோம்.

நாம் முன்வைத்த நிபந்தனைகளானவை அற்பமானவை அல்ல. இந்த நாட்டின் இறைமை மற்றும் பிரதேச பாதுகாப்புக்கானது. முதலாவது தேசப் பாதுகாப்பு. அடுத்தது பொருளாதார வளர்ச்சியை எட்டுதல். நாட்டின் முன் உள்ள பிரதான தேவை இது.

மகிந்த அனுப்பியிருக்கும் கடிதம் குறித்து நாம் எதுவும் சொல்வதற்கில்லை என்றார் சோமவன்ச அமரசிங்க.

இச்சந்திப்பின் போது உடனிருந்த ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக நாம்
விஞ்ஞானப்பூர்வமாக விமர்சனங்களையே நாம் முன்வைத்து வருகிறோம். அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை மிகவும் வன்மையாக விமர்சிக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அதிகாரத்துக்கு வர ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கிறது. மேலதிகமான தொகையைச் செலுத்தி அதிகாரத்தை மகிந்தவும் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்றார் அவர்.

ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமக்கு என்ன விலை பேசப்பட்டது என்றுதான் கூறி வருகின்றனர். மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு வந்தவர்கள் இப்படியான ஒரு கீழ்நிலைக்குச் செல்லக்கூடாது. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய கீழ்நிலைக்குச் செல்ல மாட்டர்கள் என்றார் அவர்.

வரவு-செலவுத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்ப்பதாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க நினைப்பதாலும் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பை ஜே.வி.பி. புறக்கணிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

வரவு-செலவுத் திட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தால் வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நிலை வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.