Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐ.தே.க.வின் மாற்றுக் குழுவினருடன் மகிந்த சந்திப்பு
Date&Written by: (17.11.2007- Nitharsan)

ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வரவு-செலவுத் திட்டத்திற்கு தமது பூரண ஆதரவு உள்ளது என்பதை அரச தலைவருக்கு தெரிவிப்பதற்காகவே இச்சந்திப்புக்குச் சென்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுத்தலைவர் கரு ஜயசூர்ய தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழுவில் இருக்கும் 17 பேரும் இச்சந்திப்புக்கு சென்றனர்.

சந்திப்பின் போது, வரவு-செலவுத்திட்ட காலத்தில் அரச தரப்பில் இருக்கும் பலர் கட்சி மாற இருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து மகிந்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அரசை விட்டு இனிமேல் எவரும் வெளியேறப்போவதில்லை என்று தெரிவித்த அவர், எதிரணியினர் கூறுவது போல் என்னுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக எதிரணிக்கு சென்றுவிட்டால் நான் தனியாகவா அரசை நடத்துவது என்று நகைச்சுவையாக கூறியதாக சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் எதிரணியினர் கூறிக்கொண்டு திரிவது போல அரசைவிட்டு எவரும் வெளியேறப்போவதில்லை என்று தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும், மகிந்த ராஜபக்ச இச்சசந்திப்பில் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவினரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் வினவியுள்ளார்.

அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழுவினர் தாம் ஒருபோதும் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.