Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் படைத்தளபதிகளுக்கு மகிந்த விளக்கம்
Date&Written by: (17.112007- Kugilan)

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னாள் படைத்தளபதிகளை அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார்.

இச்சந்திப்பு மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (15.11.07) நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஜெனரல்களான டெனிஸ் பெரேரா, சிறில் ரணதுங்க, ஹமில்டன் வணசிங்க, ஜெரி டி சில்வா, றொகான் தளுவத்த, சிறீலால் வீரசூரிய மற்றும் அட்மிரல்களான பசில் குணசேகர, தயா சந்தகிரி மற்றும் எயார் சீஃப் மார்சல்களான பத்மன் மென்டிஸ், ஹரி குணதிலக்க, டிக் பெரேரா, ஒலிவர் ரணசிங்க, ஜெயலத் வீரக்கொடி ஆகிய முன்னாள் படைத்தளபதிகள் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் போது, விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு எந்தளவுக்குத் தேவை என்பது குறித்தும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்தும் விளக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.