Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐ.தே.க.வின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறு
Date&Written by: (17.11.2007- Delan)

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

வரவு-செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹேல் குணசேகர, வஜிர அபேவர்தன ஆகியோருக்கே குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் சகல உறுப்பினர்களும் உரையாற்றுவதற்கான உரிமை இருக்கின்றது.

ஆனால் குற்றப் புலனாய்வுத்துறையினரின் நடவடிக்கை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறிய செயலாகும். தனிப்பட்ட ஒருவரால் மத்திய வங்கிக்கு அனுப்பட்ட நிதி தொடர்பாக விசாரணை நடத்தவே குற்றப் புலனாய்வுத்துறையினர் இவர்களை அழைத்திருந்தனர்.

வரவு-செலவுத்திட்ட விவாதம் ஆரம்பித்த பின்னரே விசாரணைகள் என்ற போர்வையில் குற்றப் புலனாய்வுத்துறையினரின் இடையூறுகள் அதிகரித்துள்ளன. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பாதுகாக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.