Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

யாழில் ஊடக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்
Date&Written by: (16.11.2007- Geetha)

யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடக நிறுவனங்களுக்கு சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

படைத்தொடரணிகளின் நடமாட்டம் தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்று அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

செல்லிடப்பேசியில் உரையாடியவரைத் தாக்கிய படையினர்

சிறிலங்காப் படையினரால் யாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா படைக் காவலரணுக்கு அண்மையில் நின்று செல்லிடப்பேசியில் உரையாடினார் என்று குற்றம்சாட்டிப் படையினர் இளைஞரைத் தாக்கியுள்ளனர். வடிவேலு பொன்ராசா (வயது 32) என்ற இளைஞர் தாக்குதலுக்கு உள்ளானவர் எனத் தெரியவந்துள்ளது.

- தென்மராட்சி உசன் மிருசுவில் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் தனியார் காணிகளுக்கு சென்று தேங்காய்களை திருடிச் செல்கின்றனர்.

- சாவகச்சேரி வடக்கு மீசாலைப் பகுதியை சேர்ந்த டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த யோகேஸ்வரன் கேதீசன் (வயது 22) என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார்.

- வடமராட்சி நெல்லியடி குஞ்சன் கடைப்பகுதியிலிருந்து பருத்தித்துறை வரை சிறிலங்காப் படையினர் புதிய காவலரண்களை வீதியின் இருமருங்கும் அமைத்து வருகின்றனர்.

- வடமராட்சி வதிரி சமரபாகுப் பகுதிகளில் படையினரும் கிராம அலுவலர்களும் இணைந்து குடும்பப்பதிவுகளை திரட்டி வருகின்றனர். படையினரின் இந்நடவடிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

- யாழ். வடமராட்சி எல்லன்குளம் மாவீரர் துயிலுமில்லத்தை சுற்றி சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.