Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலுக்கே மக்கள் ஆணை வழங்கினர்: மகிந்த
Date&Written by: (16.11.2007- Delan)

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலுக்கே மக்கள் ஆணை வழங்கினர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திடீர் "பல்டி" அடித்துள்ளார்.

மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இதனைத் தெரிவித்ததாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடக இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தை அவர் யாரிடம் எதற்காக தெரிவித்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.

அச்செய்தி விபரம்:

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்த்து பொறுக்க முடியாதவர்களே கிளிநொச்சி மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் வல்லமை எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்குக் கிடையாது. வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் புலிகளுக்கே உள்ளது. அதற்கான சூழ்ச்சிகளே பல வழிகளிலும் முன்னெடுக்கப்படுகிறது.

சிறிலங்காவை கட்டி எழுப்புவதுடன் எமது நிதி வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் இம்முறை மக்களுக்கான வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சில சக்திகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொண்டு வடக்கு, கிழக்கு மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளனர். அதனையே அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது. அனைத்தையும் நடைமுறைப்படுத்த எமக்கு நாடு அவசியம். தாய்நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

அதற்காகவே பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பயங்கரவாதிகளைப் பூண்டோடு ஒழிக்கும்வரை பின்தொடர்ந்து தாக்கியழிக்கும் நடவடிக்கை தொடரும் என்று மகிந்த கூறியதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.