Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் முடக்கம்: அமெரிக்காவுக்கு சிறிலங்கா நன்றி
Date&Written by: (16.11.2007- Delan)

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கியமைக்காக அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம கூறியதாவது:

உலகம் முழுவதிலும் நிதி திரட்டி புலிகளுக்கு ஆயுதம் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமையே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டாகும். எனவே வேறு ஒரு பெயரிலோ அல்லது புதிதாகவோ மீண்டும் இயங்க முடியாதபடி இந்த அமைப்புக்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க திறைசேரி அதிகாரிகளிடம் கோரினேன். எனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் செயற்பட்டுள்ளனர்.

அந்த அமைப்பின் 2006 ஆம் ஆண்டின் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஆராய்ந்த பின்னரே பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதலாவது அமெரிக்க நிறுவனமாக அந்த நாட்டின் திறைசேரி விளங்குகின்றது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16 புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் போர்வையில் அவர்கள் நிதி சேகரிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர் என்றார் அவர்.

அதைத் தொடர்ந்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச பேசுகையில், அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது போல் சிறிலங்காவிலும் அந்த அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளையும் மகிந்த அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த ரோகித, விமல் வீரவன்சவின் கோரிக்கையில் எவ்வித விவாதத்துக்கும் இடமில்லை. புலிகள் மற்றும் புனர்வாழ்வுக் கழகம் ஆகிய அமைப்புக்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வந்து குவியும் நிதிகளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.