Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்கா அரசில் பதிவு செய்யப்பட்ட தனியார் படகுக் கட்டுமான தொழிலகம் மீது வான்குண்டுத் தாக்குதல்
Date&Written by: (16.11.2007- Shanthini)

சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சால் கிளிநொச்சி நகருக்கு தெற்காக உள்ள திருமுறிகண்டியில் உள்ள தனியாரின் படகுக் கட்டுமானத் தொழிலகம் அழிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:28 மணிக்கும் 6:35 மணிக்கும் இடையில் இரண்டு முறை "சோலை" கண்ணாடி இழைப்படகுகள் உற்பத்தி நிறுவனம் என்ற தனியார் தொழிலகத்தை இலக்கு வைத்து குண்டுகளை வீசின.

இந்த தாக்குதலால் தொழிலகத்தின் பல கோடி ரூபாக்கள் பெறுமதியான பொருட்கள் மற்றும் படகுகள் அழிந்துள்ளன. இந்த தொழிலகம் சிறிலங்கா அரசில் பதிவு செய்யப்பட்ட தனியார் தொழிலகம் ஆகும். இந்த தொழிலகத்தை மகேந்திரன் என்பவர் முதலிட்டு நடத்தி வந்துள்ளார்.

ஆழிப்பேரலை அழிவின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் உதவிகளைச் செய்ய தொண்டு நிறுவனங்களின் வேண்டுகைக்கு ஏற்ப 350 வரையான படகுகளை இந்த தொழிலகம் உருவாக்கியுள்ளது.

தற்போதும் கிளிநொச்சி அரச அதிபர் வேண்டுகைக்கு இணங்க ஒரு தொகுதிப் படகுகள் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளதாகவும் திருமுறிகண்டியைச் சேர்ந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த 300 வரையானோர் இந்த தொழிலகத்தில் பணிபுரிந்து தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் தொழிலகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிலகத்தை அழிப்பதற்காக இன்று காலை சிறிலங்கா வான்படை இலக்கு வைத்து 6 குண்டுகளை வீசி அழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஏ-9 சாலையோரம் திருமுறிகண்டிக் கோவிலுக்கு அருகில் இந்த தொழிலகம் அமைந்துள்ளது.

சிறிலங்கா வான்படைத் தாக்குதலின் போது தொழிலகம் அருகில் உள்ள 12 வீடுகள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன. வீடு ஒன்றிற்குள் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்தவர் முறிகண்டி அரை ஏக்கர் திட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ரூபி (வயது 32) என்றும் அவர் 3 பிள்ளைகளின் தாயார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த வான்குண்டுத் தாக்குதலின் போது திருமுறிகண்டிக் கோவிலுடன் இருந்த கடைகள் சேதமாகியுள்ளன. கடைகளின் பொருட்கள் சேதமாகின. கூட்டுறவுச்சங்கம் ஒன்றும் திருமுறிகண்டியில் உள்ள இ.த.க பாடசாலை- அஞ்சலகம் மற்றும் வீடுகள் கடைகள் ஆகியனவும் சேதமாகியுள்ளன.

திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள வணிக நிலையங்கள் கடந்தும் குண்டுச் சிதறல்கள் காணப்பட்டன.

மக்களை அழிக்கவும் மக்களுக்கான உடமைகளை அழிக்கவும் திட்டமிட்டு இந்த தாக்குதல் சிறிலங்காப் படையினரால் நடத்தப்பட்டுள்ளது.

மக்களை அழிக்கவும் மக்களுக்கான உடமைகளை அழிக்கவும் திட்டமிட்டு இந்த தாக்குதல் சிறிலங்காப் படையினரால் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 4 முறை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

பாடசாலைகளில் மாணவர்கள் தேர்வுகள் எழுதும் நிலையில் அவர்களுக்கு பதற்றம் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.