Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அனைத்து அரசியல் கட்சிகளும் உடைகின்றன!
Date&Written by: (15.11.2007- Devi)

சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமது வரவு-செலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்கிற சூழல் வெளிப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை முதலே கொழும்பு அரசியல் களம் பாரிய சூடு பிடிக்கத் தொடங்கியது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து நேற்று புதன்கிழமை விஜயதாச ராஜபக்ச விலகி எதிரணிக்குத் தாவினார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மகிந்த ரட்ணதிலக்க, மகிந்த ராஜபச்கவை சந்தித்து அரசாங்கம் பக்கம் இன்று தாவினார். தான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்தான் என்றும் மகிந்த ரட்ணதிலக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ரட்ணதிலக்கவை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதி நீதியமைச்சர் டிலான் பெரேரா, சிறிலங்காவின் மத்திய குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தமது கட்சியின் 4 நிபந்தனைகளை 6 நாட்களில் நிறைவேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கெடு விதித்திருந்த நிலையில் அவைகள் நிபந்தனைகள் அல்ல- கோரிக்கைகள்தான் என்று அரசாங்கத்தின் பக்கம் தாம் தாவ உள்ளதை ஜே.வி.பி.யின் விஜித ஹேரத் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மகிந்தவை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 4 பிக்குகள் எதிரணிக்குத் தாவ உள்ளதாக பெயர்களுடன் செய்திகள் வெளியான நிலையில் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர், அரசாங்கத்தையே ஆதரிப்போம் என்றார்.

இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் இன்று மாலை 6:00 மணிக்கு ஆலோசனை நடத்தியுள்ளது. இ.தொ.க.விலும் மீண்டு தாவல்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தி.மகேஸ்வரன், அரசாங்கத்தின் பக்கம் தாவக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் எதிரணிப் பக்கம் தாவிவிட வேண்டாம் என்று இன்று மாலை நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து அர்ஜுன ரணதுங்க, எதிரணிக்குத் தாவிவிடுவார் என்ற நிலையில் அவருக்கு மீண்டும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி கொடுக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச பேரம் பேசியுள்ளார்.

தென்னிலங்கையில் உச்சபட்ச அரசியல் குழப்ப சூழ்நிலைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு இது தொடர்பில் ஆலோசனை நடத்த உள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.