Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள்தான்
Date&Written by: (15.11.2007- Ramani)

சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள்- ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள்- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள தமிழக முதல்வர், முன்னாள் பிரதமரை படுகொலை செய்த, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா எங்களின் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.

தங்களுடைய தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, அவர்கள் மறக்கவொண்ணாத் துன்பம், துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இத்தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் மனிதநேயமும், தமிழ் இன உணர்வும் கொண்ட கோடானு கோடி தமிழர்கள் உண்மையாகவே இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த மரியாதையுடன் காங்கிரஸ் நண்பர்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை, மனித இதயம் படைத்த எவராலும் ஏற்கவே முடியாது. அப்படி ஒரு கோரமான, சோகமான சம்பவம் அதுவும் தமிழ் மண்ணில் நிகழ்ந்திருக்கவே கூடாது. அது கண்டனத்திற்குரியது. இதை நாம் இப்போது சொல்லவில்லை. இந்தச் சம்பவம் நடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம்.

அந்நிகழ்வின் விளைவுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லாத ஓர் இயக்கமாக இருப்பினும் கூட- தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள்- ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சொந்த நாட்டிலேயே அந்நாட்டு முப்படையினரால்- ஈவு இரக்கமின்றி காக்கைக் குருவிகளைப்போல் கொல்லப்பட்டும், வாழ்வுரிமையை இழந்தும், பட்டினியாலும், நோயாலும் அழிக்கப்படும் நிலை நிலவுகிறதே! சிங்கள அரசு தமிழர்கள் மீது மூர்க்கத்தனமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் திட்டமிட்டு போர் நடத்துகிறதே! சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள் அவர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

ஈழத் தமிழர்களை அழித்து வரும் ராஜபக்சே அரசு ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில குறைந்தபட்ச சலுகைகளைக்கூட காலில் போட்டு மிதித்துவிட்டது என்பதும் உலகம் அறிந்த உண்மையல்லவா!

அந்த மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற பற்பல வெளிநாடுகள்- நோர்வே, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாட்டவர்கள் எல்லாம் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தங்களது மனித நேயத்தைக் காட்டி வரும் வேளையில், சிவிலியன் மக்கள் மீதும், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் மீதும் கூட குண்டுமாரி பொழிந்தவர்களைத் தடுத்ததோடு, சமாதானப் புறாவாகப் பறந்து, இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு, அதுவும் நாட்டால் வேறுபட்டாலும், தமிழ் மான உணர்வில் ஒன்றுபட்ட ஒருவருக்காகக் கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசியக் குற்றமாகும் என்பதை நிதானித்து நமது காங்கிரஸ் சகோதரர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

கலைஞர் அவர்கள் ஆண்டபோது இப்படி ஒரு படுகொலை நிகழவில்லை. மாறாக மத்தியில் உள்ள ஆட்சி- காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த ஓர் ஆட்சி- குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோதுதான் நிகழ்ந்தது என்றாலும், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல எத்தனையோ சொல்லொணாக் கொடுமைகளை தி.மு.க.வும், அதன் தோழமையினரும் அன்று அனுபவித்தனர்.

அவைகளையெல்லாம் தாண்டி சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிகழ்வுகளின் போது, இப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கி, நடந்த சம்பவங்களைக் கண்டித்துவிட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு, தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்போடு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழா குழு (1989 இல் மத்தியில் வி.பி. சிங் பிரதமராகவும், ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது) வில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் டில்லி பார்லிமெண்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் மதிய உணவுக்காகக் கலைந்து, உணவு பரிமாறும்போது, பலருடனும் ராஜீவ் காந்தி அவர்கள் சகஜமாகப் பேசி வந்தவர், திடீரென என்னைப் பெயர் சொல்லி அழைத்து, அருகில் அழைத்து, தனியே பேசினார்.

இலங்கையில் இனப் படுகொலை நடப்பது மிகவும் கொடுமை. இதை நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அங்கே தீவாயு (நேப்பாம்) குண்டு வீசுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது என்று கூறினார்.

ராஜீவ் அவர்களே, நீங்கள் தங்கள் தாயார் இந்திரா காந்தி அவர்கள் கடைசியாக தஞ்சாவூருக்கு வந்தபோதே இதே சொல்லை பயன்படுத்தினார். இப்போது நீங்களும் அதையே சொல்வது தங்களுக்குள்ள மனிதாபிமானத்தினைக் காட்டுகிறது என்று நான் சொன்னவுடன், தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் சொல்லுங்கள் என்றே சொன்னார். அதன்படி நான் சென்னை வந்து முதல்வரிடம் (கலைஞரிடம்) ராஜீவ் காந்தி அவர்கள் சொன்னதைக் கூறியதோடு, அவர்தம் பதில் பற்றி தன்னிடமோ அல்லது குறிப்பிட்ட சில அதிகாரிகளிடமோ கூறச் செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி சொன்னதையும், முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.

அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டது மிகக் கொடுமை- ஏற்கவே இயலாது!

என்னை அவர் தனியே அழைத்துப் பேசியவுடன் சற்று தூரத்திலிருந்து பார்த்தவர் "இந்து" ஆசிரியர் என். ராம் அவர்கள்.

அதற்குப்பின் எவ்வளவோ நடந்துவிட்டன!

ராஜீவ் கொலையையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் 20 ஆண்டுகளாக நொடிதொறும் அனுபவிக்கும் வாழ்க்கைத் துயரத்தையும் ஒன்றாகவே காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால் அது சரியாக இருக்குமா?

அண்மையில் இலங்கைக்குச் சென்று உரையாற்றிய, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், இராணுவ நடவடிக்கையால் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வுதான் வழி. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று ராஜேபக்ச அரசுக்கு அறிவுரை கூறிவிட்டு வந்துள்ளாரே, அது குறித்து தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தவர் பேசலாமா என்று கேட்டால், நியாயமா?

அனுதாபம் தெரிவித்ததை விட சற்றுக் கூடுதலான நடவடிக்கை அல்லவா, இது!

நல்லெண்ணத்தோடு அவர்கள் சொன்னதைப்போலவே, எவ்வித உள்நோக்கமும் இன்றி கண்ணீர் அஞ்சலியை கலைஞர் விடுத்தால், அதைக் கண்டு இரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும், பலவீனப்படுத்த வேண் ம் என்று நினைக்கும் மதவெறி மற்றும் பார்ப்பனீய சக்திகளுக்கு அறிந்தோ, அறியாமலோ, தோழமைக் கட்சியினர் துணை போகலாமா?

ஒரு மரணத்துக்காகக் கண்ணீர் வடிக்கக்கூடாது; ஆனந்தக் கண்ணீர் உகுக்கவேண்டும் என்ற எண்ணத்தை காங்கிரசார் உருவாக்கலாமா? இந்நிலை அக்கட்சிக்குப் பெருமை சேர்க்காதே!

திரு. வீரப்பமொய்லி அவர்களிடம் கேட்கப்பட்டபோது கூட, அவர்கள் அவர்களது தனிப்பட்ட உணர்வு என்று சொன்னதையும் சுட்டிக்காட்ட நாம் விழைகிறோம்.

தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களையே படுகொலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனரே- அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றா கண்களை மூடிக்கொண்டு விட்டனர்? அரசியலில் தேவைப்படும் போது, கைகுலுக்கிக் கொண்டது இல்லையா?

நாகரிகம் கருதி பல சந்தர்ப்பங்களில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில்லையா?

பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்று கூறி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தையே தீண்டத்தகாத பட்டியலில் வைக்கவில்லையே!

தடை செய்யப்பட்ட காஷ்மீர், வடகிழக்கு மாகாண தீவிரவாத அமைப்புக்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லையா?

ராஜீவ் படுகொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாழும் ஒரு பெண்மணி (நளினி) விடயத்தில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பெருமை மிக்க எடுத்துக்காட்டாகக் காங்கிரசார் கொள்ள வேண்டாமா?

வெறும் வாய்க்கு அவலா?

அவரவர்கள் கருத்துக்களை வெளியிட அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும்,

அரசியல் எதிரிகளுக்கும், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்போருக்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு இந்த அவலை மெல்லுங்கள் என்று தருவதால், என்ன லாபம்?

மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக்கல்லாக இருக்கும் தி.மு.க., ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம்- யோசிக்க வேண்டாமா?

மனிதநேயர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதையும் அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சி நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கென்ன (தி.க.) உரிமை என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

காரணம், 1954 முதல் 1967 வரை அதை ஆதரித்ததோடு, 2004 இலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகத்தான ஆதரவினையும், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதனை ஆதரித்தோடு, இன்னமும் ஆதரிப்பவர்கள் என்ற உரிமையுடனும் சுட்டிக்காட்டுகிறோம் என்று அதில் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.