Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

நிபந்தனைகள் அல்ல- கோரிக்கைகள்தான் முன்வைத்துள்ளோம்: ஜே.வி.பி.யின் விஜித ஹேரத்
Date&Written by: (15.11.2007- Ramanan)

மகிந்த அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுதான் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விஜித ஹேரத் கூறியதாவது:

யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் இரத்துச் செய்ய வேண்டும்,

அனைத்துக் கட்சி மாநாடு கலைக்கப்பட வேண்டும்.

ஐ.நா. உட்பட அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களை தடுத்து நிறுத்த வேண்டும்

மற்றும்

நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் ஆகியவை எமது கோரிக்கைகள்தான்.

இவற்றை நடைமுறை சாத்தியமான விதத்தில் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும்.

தற்போது நாட்டில் தேர்தல் வருமாயின் அல்லது வரவு-செலவுத் திட்டம் தோல்வி அடையுமாயின் அமையப் போகும் அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும்? புதியதொரு அரசாங்கத்தால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா? ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார களநிலைமைகளை ஆராய்ந்தே அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற தீர்மானத்தை ஜே.வி.பி. மேற்கொள்ளும்.

எதிர்வரும் 18 ஆம் நாள் இரவு நடைபெறும் கட்சியின் அரசியல் உயர்மட்ட சபையில் இந்த வரவு-செலவு திட்டத்தை ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

ஆனால், நாம் அரசாங்கத்துக்கு நிபந்தனைகளை விதித்ததாகவும் அவற்றை 6 நாட்களுக்குள் செய்து காட்டுமாறு காலக்கெடு விதித்ததாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.

வரவு-செலவுத் திட்டத்தையும் எமது கோரிக்கைகளையும் தொடர்புபடுத்தி எவரும் முடிச்சுப் போட வேண்டாம் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

மகிந்த அரசாங்கம் பக்கம் தாவக்கூடும் என்ற ஜே.வி.பி.யினர் பட்டியலில் விஜித ஹேரத்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.