Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிந்த ரட்ணதிலக்கவை சேர்ப்பதா?: சு.க. மத்திய குழுவிலிருந்து டிலான் பெரேரா விலகல்
Date&Written by: (15.11.2007- Nitharsan)

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து விலகுவதாக பிரதி நீதியமைச்சர் டிலான் பெரேரா இன்று அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த மகிந்த ரட்ணதிலக்கவை ஆளும் தரப்பிற்குள் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் பதவி விலகியிருப்பதாக மகிந்த ராஜபக்சவுக்கும் அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தனது விலகல் குறித்து அவர் மேலும் கூறியாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுதான் மகிந்த ராஜபக்சவை அரச தலைவராக்கியது. கட்சித் தலைவர் என்ற ரீதியில் கட்சி குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. அதிகாரம் இருக்கிறது.

ஆனால் கட்சிக்குள் கொலைகாரர்களையும் பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளையும் அவர் தற்போது இணைத்து வருகின்றார். இதற்கு கட்சி மத்திய குழுவிடம் அவர் அனுமதி கோரவில்லை. கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் அரச தலைவருக்குரிய அதிகாரத்தையும் வைத்து அவர் கட்சிக்குள் இப்படியான மோசமானவர்களைக் கொண்டுவர முனைகிறார். அவர்களை கட்சிக்குள் இணைப்பதாயின் கட்சி மத்திய குழுவுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாற செய்யாமல் தன்விருப்பப்படி செயற்படுவது கட்சியைப் பாதிக்கும் செயலாகும்.

கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச தனது விருப்பத்திற்கு இப்படியானவர்களை கட்சிக்குள் சேர்ப்பதனை என்னால் அனுமதிக்க முடியாது. குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் தற்போது இருந்து கொண்டு எல்லாவற்றுக்கும் தலையாட்டுபவர்கள் போன்று என்னால் செயற்பட முடியாது.

இதன் காரணமாகவே கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். எனினும் எதிரணிக்குத் தாவும் திட்டம் என்னிடம் இல்லை. கட்சிக்குள் இருந்தவாறே சுதந்திரமாக செயற்படவிருக்கிறேன் என்றார் அவர்.

அரசாங்கத்துக்கு தாவிய மகிந்த ரட்ணதிலக்கவும் டிலான் பெரேராவும் நீண்டநாள் பகையாளிகளாகவே உள்ளனர்.

1997 ஆம் ஆண்டு டிலான் பெரேராவுடன் இரத்தினபுரி வீதியில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த நாலந்த எல்லாவலவை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தில் மகிந்த ரட்ணதிலக்கவும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியாக இருப்பவர் டிலான் பெரேராதான். இந்த கொலை வழக்கு அரசியல் தலையீடுகளால் மூடி மறைக்கப்பட்டாலும் டிலான் பெரேராவும் மகிந்த ரட்ணதிலக்கவும் கடும் விரோதிகளாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே எதிரணியிலிருந்த மகிந்த ரட்ணதிலக்கவை ஆளும் தரப்பிற்குள் மகிந்த ராஜபக்ச இணைத்துள்ளார். இதன் காரணமாகவே டிலான் பெரேரா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.