Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்கா அரசியலில் சூடு பிடிக்கும் பேரம்: ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் ஒருவர் இணைவு
Date&Written by: (15.11.2007- Delan)

மகிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடையச் செய்து மகிந்த ராஜபக்சவை கவிழ்த்துவிட வேண்டும் என்பதற்காக எதிரணியினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சிறிலங்காவின் அரசியலில் "தாவல்" விளையாட்டுகளும் "பேர"ங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ரட்ணதிலக்க இன்று வியாழக்கிழமை காலை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்துள்ளார். ஆளும் தரப்பிலிருந்து விஜயதாச ராஜபக்சவை எதிரணியினர் நேற்று வளைத்துப் போட்டதைத் தொடர்ந்து எதிரணியிலிருந்த மகிந்த ரட்ணதிலக்கவை ஆளும் தரப்பினர் தமது பக்கம் வளைத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதனையடுத்து சூடுபிடித்துள்ளன.

அரச தரப்பு அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகைக்கு இன்று காலை சென்ற ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ரட்ணதிலக்கவை மகிந்த ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுக்களின் போது அரசாங்கத்தில் முக்கிய பதவி ஒன்றை தருவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியிளித்திருக்கிறார். இதனையடுத்து அரச தரப்பிற்கு தான் தாவுவதாக மகிந்த ரட்ணதிலக்க அவரிடம் உறுதியளித்தார்.

இதனையடுத்து இன்று காலை நாடாளுமன்றத்திற்குச் சென்ற மகிந்த ரட்ணதிலக்க ஆளும் தரப்பு வரிசையில் அமர்ந்தார்.

மகிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் யுத்தத்திற்கு ஆதரவு வழங்கி அதன்மூலம் சமாதானத்தை நிலைநாட்டவே தான் இந்த முடிவை எடுத்ததாக அரச தரப்பிற்கு தாவிய பின்னர் மகிந்த ரட்ணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆளும் தரப்பில் உள்ள அர்ஜூன ரணதுங்க எதிரணிக்குத் தாவும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளியான தகவல்களையடுத்து அவரை அலரி மாளிகைக்கு அழைத்த மகிந்த ராஜபக்ச அவருடன் நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.