Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

நாடாளுமன்றத்தைக் கலைப்பேன்: ஜே.வி.பி.க்கு மகிந்த ராஜபக்ச
Date&Written by: (15.11.2007- Delan)

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையில் சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுடனும் நேற்று புதன்கிழமை மாலை முதல் இரவு வரை மகிந்த ராஜபக்ச நீண்ட ஆலோசனை நடத்தினார்.

வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்க ஜே.வி.பி.யினர் விதித்திருந்த நிபந்தனைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக ஜே.வி.பியினருக்கு எச்சரிக்கை கடிதத்தை மகிந்த ராஜபக்ச அனுப்பியதாக தெரிகிறது.

ஜே.வி.பியினர் கடந்த காலங்களில் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியிருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, தற்போது ஏற்க முடியாத நிபந்தனைகளை முன்வைத்து வரவு-செலவுத் திட்ட நேரத்தில் அரசைக் கவிழ்க்கும் வகையில் செயற்படுவதானது நியாயமற்றது எனவும் அதனையும் மீறி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்று ஜே.வி.பி. பிடிவாதமாக நிற்குமானால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதனைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் நான்கு நிபந்தனைகளை விதித்து அதனை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியிருந்தது.

1. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உடன் இரத்துச் செய்வதாக அறிவிக்க வேண்டும்.

2.இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்து கட்சிக்குழுவை கலைக்க வேண்டும்.

3. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளோ அல்லது பிரதிநிதிகளோ சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பதனை தடுக்க வேண்டும் அல்லது அத்தகைய பயணங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

4. இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இறைமைக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் அரசாங்கம் செயற்படும் என உறுதியளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச கடிதம் அனுப்பியிருப்பதால் ஜே.வி.பி. வட்டாரங்கள் இந்த விடயத்தில் விசனமடைந்திருப்பதாகவும் எனினும் அரசாங்கம் கவிழ்ந்து ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதனை ஜே.வி.பி. விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

எனினும் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவும் அதேநேரம் அரசைக் கவிழ விடாது பாதுகாக்கவும் ஜே.வி.பி. முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.