Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவின் தென்பகுதியில் விடுதலைப் புலிகள்: அமைச்சர் கேகலிய ரம்புக்வெல
Date&Written by: (15.11.2007- Ranan)

சிறிலங்காவின் தென்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுவியுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும், பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது:

முகமாலைப் பிரதேசத்தில் சிறிலங்காப் படையினர் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைள் தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அங்கு கடந்த ஒன்றரை மாத காலமாக பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிக்குள் புலிகள் ஊடுருவ முயற்சித்து வந்ததையடுத்தே படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெற்கில் யால வனப் பிரதேசத்துக்கு தகுந்த பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. கிழக்கில் புலிகள் தோல்வியடைந்த போது வடக்கிற்கு தப்பிச்செல்ல முடியாமல் போனவர்கள் யால வனப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அப்பிரதேசத்தில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முடிந்தபின்னர் இது தொடர்பாக முழு விபரங்களையும் நாம் ஊடகங்களுக்குத் தெரிவிப்போம்

வவுனியாப் பிரதேசத்தில் புலிகளின் இரு இலகு இரக வானூர்திகள் பறந்ததாக சில ஊடகங்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனால் வான் படையின் சில வானூர்திகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

கிடைத்த தகவல்களை உறுதி செய்த பின்னரே ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக வெளியிட வேண்டும். பிழையான, ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பதனை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டு நலனை கருத்தில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.