Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தன்னாட்சி அரசாங்கம்: அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்"
Date&Written by: (14.11.2007- Niruba)

ஐக்கிய இலங்கைக்குள் "தமிழர் தன்னாட்சி அரசாங்கத்தை" அமைப்பதை அனுமதிக்கும் வகையில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கான அமெரிக்காவின் இராணுவ உதவியை எதிர்த்து "போஸ்டன் குளோப்" இதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தின் தமிழ் வடிவம்:

உலகில் நடைபெறுகிற கொடிய மோதல்களினால் அண்மைய நாட்களில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் வடபகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற இரத்தம் தோய்ந்த மோதலின் பின்னர் போராளிகளான தமிழ்ப் புலிகள் 60 பேரை கொன்றுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தங்களது பதில் நடவடிக்கையில் 24-க்கும் மேற்பட்ட படையினரை கொன்றிருப்பதாக புலிகள் தரப்பும் தெரிவித்துள்ளது. இந்த மோதலானது சிறிலங்கா அரசாங்கத்தின் வான் தளத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தி பல இராணுவ வானூர்திகளை அழித்த 3 வாரங்களுக்குப் பின்னரும் புலிகளின் அமைதிப் பேச்சுக் குழுவின் தலைவர் கொல்லப்பட்ட ஒருவாரத்திலும் நிகழ்ந்துள்ளது.

இதேபோல்

- 52 புலிகள் பலி- மோதல்களில் 11 படையினர் காயம்: சிறிலங்கா அரசாங்கம்

- முறைகேடு நிரூபிக்கப்பட்டால் அமைதி அனுசரணையாளர்களுக்கு சிறை

- முக்கிய இலங்கை அமைதிக் குழுத் தலைவர் கொல்லப்பட்டார்

- வான் தளம் மீது புலிகளின் வானூர்தி குண்டு வீசியது

என்பது போன்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அண்மைய மோதல்களானது பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட அரசாங்கமானது வடக்கு - கிழக்கில் பெரும்பான்மையினராக வாழும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரு தசாப்த காலங்களில் போரினால் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க காங்கிரசின் இரண்டு உறுப்பினர்களுக்கு அண்மையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பிய கடிதத்தில் புலிகளின் கடந்த கால உரிமை மீறல்கள், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள், சிறார்களை படையணிகளில் சேர்த்தல் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்து போனது முதல் பாரபட்சமான எறிகணைத் தாக்குதல்கள், நீதிக்கும் புறம்பான நடவடிக்கைகள், கட்டாயமாக காணாமல் போகச் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதலில் அரச படையினர் குறிப்பிடும்படியாக செயற்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளைப் பேணுவதில் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட நிலையை உறுதி செய்யும் வரையிலும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் வரையிலும் சிறிலங்காவுக்கு ஆயுதத் தளபாடங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாராட்டும்படியான பரிந்துரையும் அக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் அண்மைய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளினால் 3 இலட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் தற்போதைய இலங்கை கொள்கைக்கு முரணாக கடந்த வியாழக்கிழமை கடல் கண்காணிப்பு தளபாடங்களையும் அதிநவீன படகுகளையும் அமெரிக்கா நன்கொடையாக சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் இனப்பிரச்சினைக்கு அமைதிப் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கான அனைத்துலக ஆயுத உதவித் தடை என்பது அவசியமானது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்பினால் இந்த ஆயுத உதவித் தடையின் விளைவுகள் குறித்து சிங்கள தேசியவாதிகளுக்கு மகிந்த சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் தமிழர் பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் ஒரு நல்லெண்ணத்தின் அடையாளமாக தமிழர்களின் வடபகுதியை பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையை திறக்க வேண்டும்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் தன்னாட்சி அரசாங்கத்தை அனுமதிக்கும் வகையிலான அரசியல் யாப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதுவே அனைத்து இலங்கையர்களின் விருப்பத்துக்குரிய தீர்வாகும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.