Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சூனியப்பிரதேசமாகிவிட்டது அம்பாந்தோட்டை: சஜித் பிரேமதாச
Date&Written by: (14.11.2007- Nitharsan)

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டை இன்று சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அம்பாந்தோட்டைக்குள் புலிகள் ஊடுருவி விட்டனர். அடிக்கடி அங்கு அவர்கள் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஒரு எல்லைக்கிராமம் போன்றே அம்பாந்தோட்டை காட்சியளிக்கிறது.

அங்குள்ள மக்கள் மாலை 6:00 மணியானால் பதற்றத்துடன் உள்ளனர். அங்கு அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

அம்பாந்தோட்டைப் பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது. புலிகளின் தாக்குதல் அச்சத்தால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வியாபாரமும் நடைபெறுவதில்லை.

எனவே அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை அரசு கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும். குறிப்பாக இராணுவத்தினருக்கு போதிய வசதிகளை செய்து கொடுத்து புலிகளின் ஊடுவல்களை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.