Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிந்த அரசில் கொள்ளையர்களும் காடையர்களும்: எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடல்
Date&Written by: (14.11.2007- Delan)

சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையர்களும் காடையர்களும் மட்டுமே உள்ளனர் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடியுள்ளார்.

வரவு-செலவுத்திட்ட இரண்டாம் நிலை வாக்கெடுப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் நிலையில் ஆளும் தரப்பும் எதிரணியும் தமது பக்கம் ஆட்களை வளைப்பதில் முனைப்புக் காட்டிவரும் நிலையில் அரசாங்கத் தரப்பிலிருந்து எதிரணிக்கு விஜயதாச ராஜபக்ச தாவியுள்ளார்.

எதிரணிக்குத் தாவிய பின்னர் விஜயதாச ராஜபக்ச கூறுகையில், கொள்ளையர்களும் காடையர்களுமே மகிந்த அரசில் இருக்கின்றனர். இதுவரை எதுவித அமைச்சுப் பதவியையும் தராமல் என்னை மகிந்த ராஜபக்ச அவமானப்படுத்தி வந்ததார். ஆனாலும் தனக்கு நெருக்கமாகவும்- தனக்கு இசைவாகவும் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை அவர் வழங்குகிறார். இது மட்டுமா பாரிய அமைச்சரவையை வைத்துக்கொண்டு மக்களின் பணத்தை வீணடிக்கின்றனர். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்பதாலேயே அரசிலிருந்து விலகினேன்.

கோப் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் இருவரும் திறைசேரி செயலாளர் மற்றும் வருமான வரித் திணைக்கள தலைவர் ஆகியோரும் பதவி விலகவேண்டும். நீதி மற்றும் சட்டம் தெரிந்தவர்கள் மட்டுமே அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

இது குறித்து நாடாளுமன்றில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியதாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகமிழைக்கும் வகையில் விஜயதாச ராஜபக்ச நடந்து கொண்டுள்ளார். விஜயதாச ராஜபக்சவை தேசியப் பட்டியல் மூலமாகவே நாடாளுமன்றிற்கு கொண்டு வந்தேன். ஆனால் இன்று எனக்கே தெரிவிக்காது எதிரணிக்கு தாவியுள்ளார். இது துரோகத்தனமில்லையா?

அரசுடன் இருக்கும் வரை மகிந்தவையும் அரசாங்கத்தையும் புகழ்ந்து பேசினார். தற்போது அவருக்கு மகிந்தவையும் இந்த அரசையும் பிடிக்கவில்லையாம். அத்துடன் அமைச்சர்களும் திணைக்களத் தலைவர்களும் அரசுக்கு நெருக்ககமானவர்களும் மோசடி செய்வதாக இவர் கூறிவருகிறார். இது நியாயமற்றது. ஆதாரமற்றது. இவர்தான் உண்மையான மோசடிக்காரர்.

மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தை எம்முடன் இருந்து கொண்டே இவர் தீட்டியிருப்பதையிட்டு நாம் வெட்கித் தலைகுனிகிறோம் என்றார்.

எதிரணிக்கு தாவியுள்ள விஜயதாச ராஜபக்ச இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவார் எனத் தெரிகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.