Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அநுராதபுர வான்பரப்பில் புலிகளின் வானூர்திகள்?: அதிகாலையில் பரபரப்பு
Date&Written by: (14.11.2007- Delan)

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது.

இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வவுனியா வான்பரப்பைத் தாண்டி அநுராதபுரப் பகுதிக்குள் நுழைந்ததை தாம் கண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச்செய்தி வெளியானவுடன் அநுராதபுரத்தில் மட்டுமன்றி தலைநகர் கொழும்பிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொழும்பிலும் பரபரப்பாகவே காணப்பட்டது.

இந்நிலையில் அநுராதபுரம் பகுதிக்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் வானூர்திகளை நோக்கிப் படையினர் வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுமார் 20 நிமிட நேரத்துக்குத் தாக்குதல் நடத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கிப் பிரயோகச் சத்தத்தால் அநுராதபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்றொரு தாக்குதல் நடத்தப்படுகின்றதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இதேவேளையில், இது வழமையான ஒத்திகையே என்று படைத் தரப்பினர் இன்று காலை தெரிவித்திருக்கின்றனர். அதிகாலை 5.00 மணியளவில் மின்சார விநியோகமும் வழமைக்குத் திரும்பியிருக்கின்றது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளிவரவில்லை.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.