தென்னிலங்கையின் அம்பந்தோட்டை மாவட்டம் யால வனச்சரலாயப் பகுதியில் அடிக்கடி நடைபெறும் தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், யால பகுதி தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம் என்றார் அவர்.
தென்னிலங்கையின் உட்பகுதியில் புலிகள் ஊடுருவியிருப்பதாக உத்தியோகப்பூர்வமாக சிறிலங்கா இராணுவத்தரப்பில் முதல் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|