Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

லங்கை இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மருத்துவர் இராமதாஸ்
Date&Written by: (13.11.2007- Ramani)

இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூரில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை மருத்துவர் இராமதாஸ் கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் சபை, நோர்வே உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இலங்கையில் அமைதியை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அமைய அரசாங்கமானது இதுவிடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை குறுகிய கால வரலையறைக்குள் செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். இலங்கையில்தான் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுவதாக அண்மையில் கூட சிறிலங்கா இராணுவத் தளபதி ஒருவர் கூறியிருக்கிறார். இலங்கையில் விரைவில் ஒட்டுமொத்த தமிழினமே அழிக்கப்பட்டு விடும் நிலைமைதான் தற்போது உள்ளது.

இந்திய மத்திய அரசுடன் மிகவும் இணக்கமாக உள்ள தமிழக முதலர் கருணாநிதி, இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளேன் என்றார் இராமதாஸ்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.