Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தினருக்கான பொதுமன்னிப்பு காலம் தொடக்கம்
Date&Written by: (12.11.2007- Delan)

தப்பியோடிய சிறிலங்க இராணுவத்தினர் இன்று முதல் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியோர் மீண்டும் படையணிகளில் இணைந்து கொள்வதற்கு அரசு வழங்கியுள்ள பொது மன்னிப்புக்காலம் இன்று திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது.

இன்று முதல் இம்மாதம் 25 ஆம் நாள் வரை இக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதிக்குள் சரணடைவோருக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

அவர்கள் முன்னர் எந்தெந்தத் தரத்திலிருந்தார்களோ அந்தத் தரத்தில் மீண்டும் இணைக்கப்படுவார்கள்.

இராணுவத்தில் புதிதாக இணைந்து பயிற்சிகளைப் பெற்றபோது தப்பியோடியவர்களுக்கும் இந்தப் பொது மன்னிப்பு பொருந்தும்.

அவர்கள் தாங்கள் இணைந்து கொண்ட படையணி நிலையங்களில் அல்லது பயிற்சி முகாம்களில் மீண்டும் இணைந்து கொள்ளலாம் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.