Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு அதிக நிதி- கல்விக்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கியுள்ளது சிறிலங்காதான்: இந்திய அமைச்சர் ப.சிதம்பரம்
Date&Written by: (12.11.2007- Nitharsan)

தெற்காசிய பிராந்தியத்திலேயே பாதுகாப்புக்கு அதிக நிதியும் கல்விக்கு மிகக் குறைந்த நிதியும் சிறிலங்கா அரசாங்கம்தான் ஒதுக்கியுள்ளது என்று இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:

ஒரு தரப்பின் அர்த்தமற்ற பயங்கரவாத செயற்பாடுகள் அல்லது மற்றொரு தரப்பின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றால் மேலதிகமான உயிரிழப்பும்தான் ஏற்படும். அமைதி என்பது பேச்சு மேசையில் கட்டி எழுப்பப்படவேண்டும். அமைதி ஒப்பந்தமானது மக்களின் நம்பிக்கை வாக்குகளையும் பெற்று வெற்றி பெற வேண்டும்.

இனப் பாரபட்ச உணர்வினாலும் கலாசார மொழி மற்றும் மனித உரிமைகள் வேறுபாட்டினாலும் எழுந்த இலங்கை இனப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு மூலமாக அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதையே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. வட அயலர்லாந்து பிரச்சனைக்கு அமைதி வழியின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் சிறிலங்காவதான் பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதே நேரத்தில் கல்விக்கான தொகை ஒதுக்கீடு என்பது இந்தப் பிராந்தியத்திலே மிகக் குறைவாக சிறிலங்காவில்தான் உள்ளது என்றார் சிதம்பரம்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் ப.சிதம்பரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.