Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வவுனியாவில் முஸ்லிம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை
Date&Written by: (12.11.207- Naji)

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் சிறிலங்கா காவல்துறைக்கு உட்பட்ட வீரபுரத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

நேரியகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரு குழந்தைகளின் தந்தையான ஜலால்தீன் கௌது (வயது 34) என்பவரே கண்கள், கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் வீரபுரத்தில் உள்ள நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்ற வேளையில், இவர் அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செட்டிக்குளம் காவல்துறையினரால் வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்டவரின் நண்பரையும் ஆயுதபாணிகள் கடத்திச் செல்ல முற்பட்ட போதும் அவர், அவர்களின் பிடியிலிருந்து தப்பியோடி வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர், திருகோணமலையில் உள்ள கிராம அபிவிருத்தி நிதியத்தில் பணிபுரிந்து வந்தவர் என்று செட்டிக்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.