Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

நல்லூரில் பாரஊர்தி உரிமையாளர் சுட்டுக்கொலை
Date&Written by: (12.11.207- Geetha)

யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு முன்பாக நேற்று காலை பாரஊர்தி உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சட்டநாதர் கோவிலுக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது ஈருளியில் வந்தவர்கள் இவரைச் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

தலையிலும், மார்பிலும் துப்பாக்கிச் சூடுகள் பாய்ந்த நிலையில் அந்த இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்டவர், நல்லூர் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த திருச்செல்வம் ஜெயக்குமார் (வயது 31) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் யாழ். மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.