Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வேலூர் வீரவணக்கக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் ச.ம.உ. கொடும்பாவி எரிப்பு: 28 சிறுத்தைகள் கைது
Date&Written by: (11.11.2007- Ramani)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழகத்தின் வேலூரில் நடத்தப்பட இருந்த வீரவணக்க கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் கொடும்பாவியை விடுதலைச் சிறுத்தைகள் கொளுத்தினர்.

வேலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீரவணக்கக் கூட்டம் நடத்தப்பட இருந்தது. அக்கூட்டத்துக்கு எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜி.விசுவநாதன் தலைமை வகிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இக் கூட்டத்துக்கான அனுமதியை இரத்துச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஞானசேகரன், காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார். இதையடுத்து கூட்டத்துக்கான அனுமதியை இரத்து செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் ஊரிஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் வீரவணக்கக் கூட்டத்தை நடத்த வேலூர் தமிழ்ச்சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் அக்கல்லூரி நிர்வாகத்திடமும் ஞானசேகரன் சென்று கூட்டத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று அச்சுறுத்தியுள்ளார். இதனால் அந்தக் கல்லூரி நிர்வாகமும் இடம்தர மறுத்தது.

இந்த இனத்துரோகத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வேலூரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரனின் கொடும்பாவியை எரித்தனர். ஞானசேகரின் கொடும்பாவியை எரிக்க முயன்றதாக 28 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.