Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கிழக்கில் ஆயுதக்குழுக்களிடையே முறுகல்: பணியாளர்களுக்கு ஐ.நா. கடும் கட்டுப்பாடு
Date&Written by: (11.11.2007- Sinthu)

மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகலைத் தொடர்ந்து அங்குள்ள தமது பணியாளர்களின் நடமாட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

அத்துடன் ஐ.நா. உயரதிகாரிகளையும் மட்டக்களப்பிற்குச் செல்ல வேண்டாம் என்று ஐ.நா. அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்களின் அலுவலகங்கள் மற்றும் நடமாட்டங்கள் உள்ள இடங்களூடான போக்குவரத்தை தவிர்க்குமாறும் அப்பகுதிகளுக்கு பணிகளின் நிமித்தமாகவேனும் செல்ல வேண்டாம் எனவும் ஐ.நா. தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

அதேபோல் திருகோணமலையிலும் பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஐ.நா. பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சில நிறுவனங்கள் (யு.என்.எச்.சி.ஆர், யுனிசெஃப், யு.என்.டி.பி) இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.