Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு பிரபாகரன் கடிதம்: "லங்காதீப"
Date&Written by: (10.11.2007- Suganthey)

அமைதிப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடிதம் அனுப்பியுள்ளதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விபரம்:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு விடுலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், நோர்வேப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக நோர்வேத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகளின் பின்னர் அவர் இத்தகைய கடிதத்தை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அடங்கியிருக்கும் விடயங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவராத போதிலும் இம் மாத இறுதியில் பிரபாகரன் ஆற்ற உள்ள மாவீரர் நாள் உரையின் போது இது பற்றி விபரமாக அவர் விளக்குவார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.