Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அனுராதபுரம் தாக்குதல்: சிறிலங்கா உயர் அதிகாரியிடம் விசாரணை
Date&Written by: (10.11.2007- Ranan)

தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுராதபுரம் வான் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் இராணுவ அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அனுராதபுரம் வான்படை தள விரிவாக்கப் பணிக்காக ஒப்பந்தப் பணியை விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு வழங்கியது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியமான இணைப்புச் செயலாளர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அனுராதபுரம் வான்படை தள விரிவாக்கத்துக்காக மணல் அனுப்பிய நபர் குறித்தும் அந்த நபரிடம்தான் சந்தேகத்துக்குரிய கரும்புலி நபர், தன்னை கருணா குழு எனக் கூறி பார ஊர்தி ஓட்டுநராக வேலை செய்துள்ளமையும் தெரியவந்ததாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனுராதபுரம் தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 2 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.