Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு எதிராக நடவடிக்கை: கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் பா.நடேசன் வலியுறுத்தல்
Date&Written by: (08.11.2007- Suguna)

தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலைக்காக அனைத்துலகின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக உடனடியாக அனுசரணையாளர் நாடாகிய நோர்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவர் லார்ஸ் ஜோன் சொல்பேர்க் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் காலை 9:00 மணிமுதல் முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்றது.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருடனான சந்திப்பின் பின்னர் இச்சந்திப்பு தொடர்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியதாவது:

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீது சிறிலங்கா வான்படை குண்டுவீசிப் படுகொலை செய்தமை குறித்த எமது கண்டனத்தை தெரிவிப்பதற்காக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவரை வன்னிக்கு அழைத்திருந்தோம். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை அவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிச் செயற்பட்ட, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உழைத்த ஒரு அரசியல்துறைப் பொறுப்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இச்சந்திப்பில் வன்மையாகக் கண்டித்தோம். அத்துடன், எமது இக்கண்டனத்தை கண்காணிப்புத் தலைவர் ஊடாக நோர்வே அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவம் குறித்தும் கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு தெரியப்படுத்தினோம். சமாதானப் பேச்சுக்கான தாயாரிப்பு வேலைகள் நடைபெறும் பகுதியில் வைத்தே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

எனவே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு எதிராக நோர்வே உடனடியாக அனைத்துலகின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கண்காணிப்பு குழுத்தலைவரிடம் வலியுறித்தியுள்ளோம்.

சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு பொறுப்பாக இருந்த ஒருவரை படுகொலை செய்ததன் மூலம் பேச்சுவார்த்தையின் மூலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒருபோதும் காணமுடியாது. படைத்துறை அழுத்தங்களின் ஊடாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, படைத்துறை வல்லாதிக்க நிலையில் இருந்துகொண்டு எந்த ஒரு இனப்பிரச்சினையையும் தீர்க்க முடியாது. அப்படித் தீர்த்ததாக வரலாறும் இல்லை.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு தொடர்பாக தமிழக மக்கள் பல்வேறு வடிவங்களில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். அங்குள்ள மத்திய அரசும் இதனை உணர்ந்து கொள்ளும் என்று நினைக்கின்றேன் என்றார் அவர்.

இச்சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப்பணிப்பாளர் சீ.புலித்தேவனும், படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் கலந்துகொண்டனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.