Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சு.ப.தமிழ்ச்செல்வனும்- முயீவாவும்- வாஜ்பாயும்: ஜெயலலிதாவுக்கு "முரசொலி" பதில்
Date&Written by: (08.11.2007- Ramani)

இந்தியாவில் அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? என்று கேள்வி கேட்ட தமிழ்நாட்டின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "முரசொலி" நாளேடு பதில் அளித்துள்ளது.

முரசொலியின் நேற்று முன்தினம் (06.11.07) இல் வெளியான அச்செய்தி விபரம்:

அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? ஒரு நிமிடம் கூடக் கருணாநிதி பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கருணாநிதி அரசைக் கலைக்க வேண்டும்

- என்று வழக்கம் போல கலைஞர் மீது சேறுவாரி இறைத்து- ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா! இதன் மூலம்-
மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பு மீது உச்சில் உமிழ்ந்திருக்கிறார் அவர்!

தீவிரவாதிகளை ஒடுக்க- என்றுதான் பா.ஜ.க. அரசு பொடாச் சட்டம் கொண்டு வந்தது.

அந்தச் சட்டத்தை துஷ்ப்பிரயோகம் செய்துதான் அப்போது தனது அரசியல் எதிரியாக இருந்த வைகோ மீது பொடா வழக்குப் போட்டு சிறையில் தள்ளினார்.

தீவிரவாதிகளை ஒடுக்க பொடாச் சட்டம் கொண்டு வந்த பிரதமர் வாஜ்பாய்தான் மகா நாகாலாந்து என்ற பெயரில் சுதந்திர- சுயாட்சி பெற்ற தனிநாடு கோரி- ஆயுதம் தாங்கிப் போராடிய தீவிரவாதிகளோடு பேச்சு நடத்த பத்மனாபய்யா என்ற அதிகாரியை தீவிரவாதிகளிடம் அனுப்பினார். நாகாலாந்து தீவிரவாதிகளின் இயக்கம் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம்தான்!

தீவிரவாதிகளின் தலைவர்களான அய்சக், முயீவா ஆகிய இருவரும் தலைமறைவாகி தப்பியோடி இத்தாலியில் வசித்துக் கொண்டிருந்தனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர்களான அவர்களை சந்தித்துப் பேச

பிரதமர் வாஜ்பாய்

பத்மனாபய்யாவை

இத்தாலிக்கே

அனுப்பினர்.

இத்தாலியில் நடந்த பேச்சு வார்த்தையில் சமாதானத்துக்கான அறிகுறிகள் தென்படவே தொடர்ந்து பாங்காக், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், தவோஸ் என்று பல இடங்களுக்கு பத்மநாபய்யாவை அனுப்பி தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாய். அது மட்டுமா? இந்தியாவிலேயே பேசலாம், வாருங்கள் என்று தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்தார் அவர்.

நாங்கள் இந்தியா வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமானால்- எங்கள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும்- என்று தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தபோது- அவர்களது கோரிக்கையை ஏற்று நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா- என்ற அந்த தீவிரவாத இயக்கத்தின் மீதான தடையையும் நீக்கியது வாஜ்பாய் அரசு.

அது மட்டுமா- இந்தியா வரும்போது எனது பிறந்த மாநிலமான மணிப்பூருக்குச் செல்வேன் என்று தீவிரவாதிகளின் தலைவர் கூறினார். மணிப்பூர் மாநில அரசு அவர்மீது ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டிருந்தது. மணிப்பூர் முதல்வர், தீவிரவாதியான அவர் எங்கள் மாநிலத்திற்குள் நுழைந்தால் கைது செய்வோம் என்று பிரகடனம் செய்தார். அப்போதும் வாஜ்பாய் அரசு - டெல்லியிலிருந்து தனது சிறப்புத் தூதரை மணிப்பூருக்கு அனுப்பி- மணிப்பூர் முதல்வரை சமாதானப்படுத்தி- தீவிரவாதிகள் தலைவராக முயீவாவைக் கைது செய்யாமல் தடுத்தது.

அந்த வாஜ்பாய் கட்சியின் வேட்பாளருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் யோக்கியச்சி ஜெயலலிதாவின் கட்சியினர் வாக்களித்தார்கள்.

- அந்த வாஜ்பாய் கட்சியுடன்தான் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணி சேர ரவிசங்கர் பிரசாத்துடனும் - அத்வானியுடனும் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் யோக்கிய சிகாமணி ஜெயலலிதா.

அது மட்டுமா?

இலங்கையில்- சந்திரிகா ஆட்சி முடிந்து ரனில் விக்கிரம சிங்கே ஆட்சி மலர்ந்தபோது- நார்வே நாட்டின் உதவியோடு - புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது ரனில் அரசு.

அப்போது கிளிநொச்சியில்- விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பத்திரிகையாளர் கூட்டம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அகில இந்தியாவிலிருந்தும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் இலங்கை செல்ல வாஜ்பாய் அரசு ஏற்பாடு செய்தது. அப்போது பத்திரிகையாளர்களுக்குப் பாஸ்போர்ட் இருக்கிறதா என்ற நடைமுறையைக் கூடப் புறந்தள்ளிவிட்டு - பல பத்திரிகையாளர்களை இலங்கைக்கு அனுப்பியது!

இப்போது -

தமிழ்செல்வன் மரணத்திற்கு கவிதாஞ்சலியா? தடை செய்யப்பட்ட இயக்கப் பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா - என்று கொழுப்பெடுத்துப் போய் கொக்கரிக்கும் ஜெயலலிதா -

அந்த வாஜ்பாய் கட்சியுடன் கூட்டு சேர மாட்டோம் என்று அறிவிக்கை விட முன்வருவாரா? வரமாட்டார்! காரணம் என்ன? அவருக்குத் தீவிரவாத எதிர்ப்பு என்பது கூட ஒரு நிரந்தரமான கொள்கையல்ல! அதற்கு அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் வைகோவே சாட்சி என்று முரசொலியில் எழுதப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.