Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் தாக்கல்!!
Date&Written by: (07.11.2007- Delan)

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மூன்றாவதும் அடுத்த வருடத்திற்கானதுமான வரவு-செலவுத்திட்டத்தை சிறிலங்கா அரச தலைவரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனம் முன் எப்போதும் இல்லாத வகையில் 166.4 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத்திட்டத்தில் அதிகளவான நிதி பாதுகாப்புச் செலவுகளுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம் பாதுகாப்புச் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்டதைவிட இந்த தொகை சுமார் 20 சதவீத அதிகரிப்பாகும். கடந்த வருடம் 139 பில்லியன் ரூபா பாதுகாப்புச் செலவீனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டிற்கு உரியதுமான வரவு-செலவுத்திட்டத்தில் மொத்த வருமானம் 750.74 பில்லியன் ரூபாவாகவும் மொத்த செலவீனம் 1,044.18 பில்லியன் ரூபாவாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி துண்டுவிழும் தொகை 293.44 பில்லியன் ரூபாவாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் மகிந்த பேசுகையில்,

தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் கருதி பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒன்றிணைய வேண்டும். தேசியப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்காக ஜனநாயகம் மற்றும் தேசிய அடிப்படையில் எமது அனைத்து வேறுபாடுகளையும் குறைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினையை அரசாங்கம் 6.2 விழுக்காடு குறைத்துள்ளது. அதேநேரம் மொத்த தேசிய உற்பத்தியை 7 விழுக்காடு அதிகரித்திருக்கிறோம் என்றார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக அவர் தனது நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தார்.

இதனிடையே நாடாளுமன்றத்திற்கு மகிந்த வருவதை முன்னிட்டு அங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.