Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு சிறிலங்கா அமைச்சர் ஹக்கீம் கண்டனம்
Date&Written by: (07.11.2007- Niyas)

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிப் பேச்சுக் குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ரவூப் ஹக்கீம் பேசியதாவது:

தமிழ்ச்செல்வன் மறைவு குறித்த எமது ஆழ்ந்த இரங்கலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய இரங்கலைத் தெரிவிப்பதன் மூலம் தென்னிலங்கையின் துரோகியாக நான் சித்தரிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. ஆனால் அதனைப் பற்றி கவலை கொள்ளவில்லை.

தமிழ்ச்செல்வனுடன் தொலைபேசியில் பலமுறை உரையாடியிருக்கிறேன். உத்தியோகப்பூர்வ அமைதிப் பேச்சுக்களின் போது நேரில் சந்தித்திருக்கிறேன். அமைதிப் பேச்சுக்களில் பங்கேற்ற அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன் இப்போது இல்லை. கருணாவும் இல்லை. பேச்சுக்களின் மூலமாக தீர்வுக்கு பின்னடைவு இது.

தமிழ்ச்செல்வன் மரணம் குறித்த பார்வையின் மூலம் தமிழ் மற்றும் சிங்களத்தரப்பினர் பிரிந்து நிற்கின்றனர். இதுவே இந்த நாட்டின் இனப்பிரிவினையை வெளிப்படுத்துவதாகும். துடுப்பாட்டத்தில் முத்தையா முரளிதரன் உலக சாதனை செய்கின்றபோதுதான் இருதரப்பும் மகிழ முடிகிறது என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.