Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அனுராதபுரத்தில் 10 வானூர்திகள் அழிப்பு- 16 வானூர்திகள் சேதம்
Date&Written by: (07.11.2007- Neelan)

அனுராதபுரத்தில் சிறப்புக் கரும்புலி மாவீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 10 வானூர்திகள் முற்றாக அழிந்ததாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அனுராதபுரம் சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இத்தகவலை அனுராதபுர மாவட்ட நீதிபதி வசந்த ஜினதாசவிடம் தெரிவித்தனர்.

முன்னதாக சேத விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் அனுராதபுரம் வான்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 164 வெடிக்காத குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுராதபுரம் மோதலின் போது சிறிலங்கா வான்படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிமருந்துகளின் அளவுகளைத் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.