Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

போலிக் கடவுச்சீட்டின் மூலம் கருணாவை பிரித்தானியாவுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசு!!
Date&Written by: (07.11.2007- Sinthu)

சிறிலங்கா அரசாங்கமே போலிக் கடவுச்சீட்டின் உதவியுடன் துணை இராணுவக்குவின் தலைவரான கருணாவை பிரித்தானியாவுக்கு அனுப்பியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்னிங் லீடர்" வார ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

இன்று புதன்கிழமை வெளிவந்த அந்த வார ஏட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு:

உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அமைய கோகில குணவர்த்தன என்ற பெயரில் கருணாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் சிறிலங்காவின் குடிவரவு- குடியகல்வு திணைக்களம் போலியான கடவுச்சீட்டை வழங்கியுள்ளது. இது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பரிந்துரையினைத் தொடர்ந்து கோகில குணவர்த்தன என்ற பெயரில் கருணாவுக்கு கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகம் நுழைவு அனுமதியை வழங்கியுள்ளது. இந்த அனுமதி கடந்த செப்ரம்பர் மாதம் 5 ஆம் நாள் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் என ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்களை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு பிரித்தானியா தூதரகத்திற்கு முன்றாம் நபர் ஊடாக அனுப்பியிருந்தது. நுழைவு அனுமதிகளை வழங்குவதற்கான பரிந்துரைக் கடிதமும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்ததுடன், கோகில குணவர்த்தனாவின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பலரது கடவுச்சீட்டுக்கள் இரஜதந்திரிகளுக்கு உரியவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அதிகாரத்தின் கீழ் வரும் சுற்றுச் சூழல்துறை அமைச்சின் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியே கோகில குணவர்த்தன எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

கோகில குணவர்த்தன என்ற பெயரில் உள்ள கடவுச்சீட்டில் பிரித்தானியாவுக்கு பயணமான கருணா ஹீத்துரூ வானூர்தி நிலையத்தில் செப்ரம்பர் 18 ஆம் நாள் இறங்கியுள்ளார். பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் வரையிலும் வானூர்தி நிலைய மற்றும் வானூர்தி போக்குவரத்து பிரதிப் பணிப்பாளரான சாலித விஜயசுந்தர கருணாவுடன் கூட வந்ததாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று வரை அவர் அதனை மறுக்கவில்லை.

பிரித்தானியாவில் உள்ள கென்சிங்ரன் பகுதியில் வைத்தே கருணா கைது செய்யப்பட்டதாக பிரித்தானியா தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்கு தான் அவரது மனைவி 3 பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். கருணாவை கைது செய்த போது கோகில குணவர்த்தன என்ற பெயரில் அவர் வசம் இருந்த போலியான கடவுச்சீட்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கருணா கைது செய்யப்பட்ட போது அவர் தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கருணாவின் மனைவியும், 3 பிள்ளைகளும் முன்னர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதுடன் அரசியல் தஞ்சத்திற்கும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கருணா தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

எனினும் கருணாவுக்கு நுழைவு அனுமதியைப் பெற்று கொடுப்பதற்கு தமது அமைச்சு பிரித்தானியா தூதரகத்திற்கு பரிந்துரைகள் எதனையும் வழங்கவில்லை என்று வெளிவிவகாரதுறை அமைச்சின் செயலாளரான பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். ஆனால் போலியான கடவுச்சீட்டின் அடிப்படையில் அவருக்கு நுழைவு அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டனவா என்று கேட்டகப்பட்ட போது அதற்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

இராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் உள்ள நடைமுறைகள் தொடர்பாகவும், தனிப்பட்டவர்களுக்கு இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதை யார் முடிவு செய்வது என்றும் கேட்கப்பட்ட போது இந்த கேள்விகளை குடிவரவு- குடியகல்வு திணைக்களத்திடம் கேட்குமாறு பாலித கோகன்ன தெரிவித்திருந்தார்.

ஆனால் அரச தலைவர் அலுவலகம், அரச தலைவர் அல்லது வெளிவிவகார அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாக குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.