Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம்: பெரியார் திராவிடர் கழகம்
Date&Written by: (07.11.2007- ramani)

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகள் வழங்குவதனை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நிகழ்வில் இக்கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் இந்நிகழ்வு நேற்று மாலை 6:00 மணியளவில் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி செயலாளர் வே.ஆனைமுத்து பேசுகையில், இந்தியாவில் நடைபெறும் ஆட்சிகள் எதற்குமே கொள்கையோ இலக்கணங்களோ இல்லை. எத்தனையோ பேரணிகள், உண்ணாவிரதப் போராட்டங்களில் சிறிலங்காவுக்கு உதவி செய்யாதே என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துப் பார்த்துவிட்டோம். ஆனால் நம்முடைய குரல் ஓங்கி ஒலித்தால்தான் தில்லிக்காரன் கொஞ்சமாவது காதில் விழும். ஆகையால் கிராமங்கள் தோறும் இதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்களில்தான் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமாகச் சென்று நாம் இந்தப் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் அஜீதா பேசியதாவது:

ஈழ மண்ணில் தங்களுடைய உயிரை துச்சமாக மதிக்கும் இயக்கம் இதயமாக வேலை செய்த மகனை இழந்துவிட்ட துயரில் உள்ளது.

சர்வதேச வரையறைகளின்படி தேசம் என்பதே தேசிய இனம்தான். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் தேசியம், தேசம் என்றால் பல தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று பொருள். ஐக்கிய நாடுகள் சபையின் 1961 ஆம் ஆண்டு பிரகடனங்களின்படி ஒவ்வொரு தேசிய இனமும் தேசமும் சுயநிர்ணய உரிமை கொண்டவையாக ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சரத்தை மட்டும் ஏற்காமல் அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. தமிழீழ மக்களின் அடிப்படை அரசியல் உரிமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியம் பேசுகிற நாம் ஒற்றுமையாக குரல் கொடுப்பதுதான் மறைந்த சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு நாம் செலுத்தும் அகவணக்கம் ஆகும் என்றார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் தி.க. பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் உரையாற்றினர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.