Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கடுமையான பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இன்று வரவு - செலவுத் திட்டம்
Date&Written by: (07.11.2007- Nitharsan)

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்ட அறிக்கையை அடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 9:40 மணியளவில் உள்ள சுபவேளையின் போது மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம் தனது மூன்றாவது வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளது.

வழமையாக 9:30 மணியளவில் கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று 9:40 மணிக்கே கூடவுள்ளதாகவும், அது நல்ல நேரம் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத்திட்ட அறிக்கை வாசிக்கப்படுவதற்கு முன்னராக காலை 8:00 மணியளவில் மகிந்த ராஜபக்ச தலமையில் அமைச்சரவை கூட்டமும் நடைபெற உள்ளது. இதன் போது மகிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு வரவு - செலவு திட்டத்தில் உள்ள திட்டங்களை அறிவிப்பார்.

கடந்த கால வரவு - செலவுத் திட்ட அறிக்கைகளில் இருந்து தற்போதைய அறிக்கை மாறுபட்டதாக இருக்கும் எனவும், அது மிகவும் குறுகிய நேரத்தில் நிறைவு பெற்றுவிடும் எனவும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது இந்த அறிக்கை ஒரு மணி நேரத்திலும் குறைவான நேரத்தை எடுக்கலாம் என்று அவை மேலும் தெரிவித்துள்ளன. வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது அறிக்கை எதிர்வரும் 9 ஆம் நாள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வரவு - செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை அடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கான வீதிகள், நாடாளுமன்ற கட்டடம், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வரவு - செலவுத் திட்ட அறிக்கை வாசிக்கப்படும் போது தியவன்னா ஓயா ஆற்று பகுதியில் கடற்படையினரின் சிறப்பு கொமொண்டோ அணியினர் சுற்றுக்காவலில் ஈடுபட, வான்படையின் தாக்குதல் வானூர்திகள் நாடாளுமன்றத்தின் வான்பரப்பின் மீது பறப்பில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ரூபவாகினி கூட்டுத்தாபனம், சிறிலங்கா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்கள் மட்டுமே இந்த நிகழ்வை நேரடியாக ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.