Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிந்த அரசின் காலத்தில் 12 ஊடகவியலாளர் படுகொலை: ஊடக அமைப்புக்கள் கண்டனம்
Date&Written by: (06.11.2007- Nitharsan)

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள் சிறிலங்காவில் 12 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெறும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுதந்திர ஊடக இயக்கம் தலைமையிலான ஐந்து ஊடக அமைப்புக்களும், சிவில் அமைப்புகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 12:30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை தாங்கியிருந்தனர். அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

"உண்மையை எழுதுவோம் உயிருள்ள வரை"

"பேனா பலமே எமது பலம்"

"வார்த்தை ஜாலமே அரசின் பலம்"

"எம்மை சிரச்சேதம் செய்தாலும் எமது பேனாக்கள் எழுதும்"

ஆகிய முழக்கங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பினர்.

சுமார் ஓரு மணி நேரம் வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியைச் சுற்றி சிறிய பேரணி ஒன்றையும் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சுனந்த தேசப்பிரிய கூறியதாவது:

ஊடகவியலாளர்களான எங்களை மகிந்த ராஜபக்சவால் அடக்கிவிட முடியாது. எமது கைகளை வெட்டலாம். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து எழுவோம்- எழுதுவோம்.

மகிந்த பதவிக்கு வந்த பின்னர் உடகவியலாளர்களுக்கு எதிராக மூன்று சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அண்மையில் தணிக்கைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். அது மட்டுமில்லை. இவரது ஆட்சிக்காலத்தில் 12 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஐந்து வானொலி நிலையங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். மூன்று பத்திரிகைகள் இவரது ஆட்சிக்காலத்தில் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இத்தகைய அடக்குமுறைகளை தொடர அவர் முடிவெடுத்திருக்கிறார் என்று தெரியவருகிறது.

இத்தகைய அடக்குமுறைகளால் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி பணியவைக்க முடியாது. அவர்கள் எந்தளவுக்கு மிரட்டினாலும் நாங்கள் தொடர்ந்தும் எமது பாதையில் பயணிப்போம். அதனை தடுத்து நிறுத்த முடியாது.

ஆரம்பத்தில் ஊடக ச்சுதந்திரத்தை வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை ஊடகவியலாளர்கள் தனித்து நின்று நடத்தினர். ஆனால் தொடர்ந்து மேலும், மேலும் அடக்குமுறைகள் தொடர்வதாலேயே சிவில் அமைப்புகளையும் எமக்கு துணைக்கு அழைத்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்தோம்.

ஊடக அடக்குமுறைகள் நிறுத்தப்படா விட்டால் எதிர்காலத்தில் இன்னும் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம். எழுதுவது எமது உரிமை. அதனை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.