Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

துணை இராணுவக் குழுக்களிடையே தொடரும் முறுகல்நிலை
Date&Written by: (06.11.2007- Sinthu)

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களான கருணா குழுவினருக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் இடையில் உச்சகட்ட முறுகல்நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் கருணா கைது செய்யப்பட்ட பின்னர் கருணாவின் கீழ் இயங்கிய துணை இராணுவக் குழுவின் தலைமைப்பொறுப்பை கைப்பற்றும் நோக்கில் திருகோணமலையில் நிலை கொண்டிருந்த பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பிற்கு வந்து கருணாவின் சகாக்களை கைது செய்திருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை தோன்றியுள்ளது.

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் உள்ள கருணா குழுவின் அலுவலகம் பிள்ளையான் குழுவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்கிருந்த கருணா குழுவினர் தப்பியோடியிருப்பதாகவும் மூவர் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த அலுவலகம் பிள்ளையான் குழுவின் முழுக்கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் இதனால் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் குழுவினரின் இந்த நடவடிக்கையையடுத்து மட்டக்களப்பின் ஏனைய இடங்களிலும் வாழைச்சேனையிலும் உள்ள கருணா குழுவினரின் அலுவலகங்களில் சிறிலங்கா காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு அந்த அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.