Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீட்டிப்பு
Date&Written by: (06.11.2007- Delan)

சிறிலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் 120 மேலதிக வாக்குகளினால் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதற்கான பிரேரணையை சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்னசிறி விக்ரமநாயக்க முன்வைத்திருந்தார்.

இப்பிரேரணைக்கான விவாத முடிவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 124 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆதரித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் பங்கேற்கவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தை தொடங்கிவைத்தார். சிறிலங்கா இராணுவ வீரர்களின் நலன் கருதி வாக்கெடுப்பில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்று அவர் அறிவித்தார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.