Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

துணை இராணுவக் குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல்
Date&Written by: (06.11.2007- Viji)

சிறிலங்கா அரசின் துணை இராணுவக் குழுக்களுக்கு இடையில் மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு மீண்டும் மோதல்கள் நடந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மட்டக்களப்பு நகரில் உள்ள கருணா குழுவினரின் முகாம்களை பிள்ளையான் குழுவினர் நேற்று கைப்பற்ற முயற்சித்துள்ளனர். இம் மோதலில் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இம் முறுகல் நிலையைத் தொடர்ந்து சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் கருணா குழுவினரின் முகாம்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து கடந்த ஞயிற்றுக்கிழமை பொலநறுவைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த கருணா குழுவினரின் வாகனம் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அக்குழுவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், கருணா குழுவின் சீலன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச அரசினால் நடத்தப்பட உள்ள மாகாண சபைத் தேர்தலில் கருணா குழுவினர் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியாக தம்மை பதிவு செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர். அதற்கு சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தற்போதைய சட்ட நடைமுறைகளில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்த தடைகளும் இல்லை என சுதந்திரமானதும், நேர்மையானதுமான மக்கள் நடவடிக்கை குழுவான பவ்ரெல் குழுவின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிக்கோ தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளின் போது ஆயுதங்களை கொண்டு சென்றால் தம்மால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிழக்கில் மாகாண சபை தேர்தல் நடைபெறலாம் எனவும் பவ்ரெல் அமைப்பு கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.