Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் சு.ப.தமிழ்ச்செல்வன்: கனிமொழி
Date&Written by: (06.11.2007- Ramani)

இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுப்பதற்காக அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்ட ஒரு தலைவர், சமாதானத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியவர், படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். அப்படியென்றால் அந்த அரசு சமதானத்தை விரும்பவில்லை என்பதை தானே காட்டுகிறது.

கொல்லப்பட்ட அந்த தலைவருக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வைகோ உள்பட பல தலைவர்கள் கண்ட அறிக்கை விட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு குரல் அதை எதிர்க்கிறது. அந்த குரல் எங்கிருந்து வந்தது? எந்த இனத்தில் இருந்து வந்தது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.