Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கிபீர் வானூர்தி பறப்புக்களுக்கு மத்தியில் பிரிகேடியரின் வித்துடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி வணக்கம்
Date&Written by: (05.11.2007- Punitha)

கிளிநொச்சி வான்பரப்பில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தொடர்ந்தும் பறப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி நகரில் இன்று திங்கட்கிழமை இறுதி வீரவணக்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சியில் இன்று முற்பகல் 11:00 மணிக்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் வைக்கப்பட்டது. அங்கு பொதுச்சுடரை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன். தியாகம் ஏற்றினார்.

வித்துடலுக்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் இசைச்செல்வி ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார்.

தொடர்ந்து தளபதி கேணல் பால்ராஜ் மாலை சூட்டினார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் அன்புமணியின் திருவுருவப்படத்துக்கு அவரின் துணைவியார் யாழ்மதி மாலை சூட்டினார்.

மேஜர் மிகுதனின் திருவுருவப்படத்துக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மேஜர் கலையரசனின் திருவுருவப்படத்துக்கு விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, லெப். ஆட்சிவேலின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப்பொறுப்பாளர் கரிகாலன், லெப். மாவைக்குமரனின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆகியோர் மாலைகளை சூட்டினர்.

இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு மலர்தூவி கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினர்.

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் ஆகியோர் மாலைகளைச் சூட்டி வணக்கம் செலுத்தினர்.

மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை, அங்கிலிக்கன் திருச்சபை பேராயர் மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்களின் உயர்நிலையினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அகவணக்கம் செலுத்தினர்.

வணக்க உரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமனற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பா.அரியநேத்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப் பணியகத்தில்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஐந்து மாவீரர்களுக்குமான வணக்க நிகழ்வு இன்று காலை 10:00 மணியளவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் சிவனடியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் லோறன்ஸ் கிறிஸ்ரி, தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதையடுத்து மண்டப நிகழ்வுகள் தொடங்கின.

பொதுச்சுடர் ஏற்றப்படடதைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவீரர்களின் அர்ப்பணிப்புக்கள் மிகுந்த போராட்டப் பணிகளை நினைவு கூர்ந்தும் போர்ச்சூழ்நிலைகளாலும், இயற்கை பாதிப்புகளாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியபோதெல்லாம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பங்களிப்புக்களையும் மீளும் நினைவுகளாக தனது தலைமையுரையில் சிவனடியார்; விளக்கினார்.

தமிழீழ சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆற்றிய பணிகளை விவரித்து உருக்கமான நினைவுரையை நிகழ்த்தினார்.

வடக்கு - கிழக்கு முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு நிலையத்தின் இணைப்பாளர் இராசன், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியக நிர்வாக அலுவலர் ஜெராட் ஆகியோரின் கவிதாஞ்சலிகளும் இடம்பெற்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் நரேன் உள்ளிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின பிரிவுசார்ந்த பணிப்பாளர்கள், பணியாளர்கள், தொண்டர்களென பெருமளவிலானோர் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு தமது இறுதி வணக்கத்தைச் செலுத்தினர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.