Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Date&Written by: (05.11.2007- Ramani)

ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளிதழான "ஜனசக்தி" யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மறைவு பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசு தயாராக இருக்கிறதா என்பது அவற்றில் முதன்மையான கேள்வி.

தமிழ்ச்செல்வனைக் கொன்றதன் மூலம் இலங்கை அரசு எதனை சாதிக்க விரும்புகிறது? தமிழர் சிங்களவர் என்று இரண்டாகப் பிரிந்து கிடக்கும் இலங்கையில் இதன் மூலம் இன ஒற்றுமையை மீண்டும் அரசாங்கத்தால் உருவாக்க முடியுமா? இவ்வாறான தாக்குதல்கள், அழிப்பின் மூலம் இலங்கையில் ஒற்றுமையை உருவாக்க முடியாது என்பது கடந்த காலம் கற்றுத் தந்துள்ள பாடம். இருந்தாலும் இலங்கை அரசு இதனை செய்திருப்பதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும்.

புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்ற தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருப்பது அனைவருக்கும் பெரும் வேதனையை அளித்திருக்கிறது. தமிழக முதல்வர் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர, அனைவரும் இறப்பின் துயரத்தை தமிழ் மக்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கு பெற்ற அமைதிக்கான உலகத் தலைவர்கள் அனைவரும் அமைதி முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் இலங்கையில் எழுந்துள்ள ஆதிக்க வெறியர்களின் குரல் இதிலிருந்து மாறுபட்டுள்ளது.

புத்த பிக்குகள் இப்படிப்பட்ட கொலைகளின் மூலம்தான் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று ஊடகங்களில் வெறிகொண்டு கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்கள். இதுதான் அரசாங்கத்தின் நிலை என்றால் பேச்சுவார்த்தை என்ற சொல் அர்த்தமிழந்து போய்விடும். நோர்வே, ஜெனிவா, ஜப்பான் என்று தொடர்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் பலன் முற்றாகப் பயனற்றதாகிவிடும்.

சிங்கள மக்களுக்கு வெறியேற்றி அவர்களிடம் உள்ள வாக்குகளைப் பெறுதல், வெறிபிடித்த ஆதிக்க அரசியலாக வெகு காலமாக இலங்கையில் தொடர்ந்து வருகிறது. வேறு எதையும் விட அவர்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் சுலபமானதாக இருக்கின்றன. ஆனால் நாடு, மக்கள், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றின் கதி என்னவாகும்? ஆனால் ஆதிக்க வெறியும் சுயநல போதையும் வந்துவிட்டால் அது யாருடைய இழப்பைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. இந்தப் பின்னணியில் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது இதில் முக்கியமான கேள்வி? இலங்கை, இந்தியாவின் அண்டை நாடு, நடைபெறும் போராட்டம் தமிழ் மக்களின் போராட்டம். இதில் இந்திய அரசு வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது.

இந்திய அரசாங்கத்தின் இராணுவ உதவியைப் பெற்று போரின் மூலம் பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என இலங்கை அரசு கணக்குப் போடுகிறது. அவ்வாறு நடக்குமானால் அதில் தமிழ் மக்கள் அழிந்து போகும் வாய்ப்புகள்தான் அதிகம் இருக்கும். இதற்கு எந்த விதத்திலும் இந்திய அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனை தீர்க்கப்பட தன்னாலான எல்லா முயற்சிகளையும் இந்தியா செய்வதுதான் இன்றைய தேவை என்று அத்தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.