Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கருணாவிடம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு?
Date&Written by: (05.11.2007- Sinthu)

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கருணா கைது செய்யப்பட்ட போது அவர் இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டை வைத்திருந்தாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (02.11.07) சிறிலங்கா அரசின் துணை இராணுவக்குழுவின் தலைவரான கருணா திடீரென கைது செய்யப்பட்டது மிகுந்த ஆச்சரியமானது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மரணத்துடன் எதுவும் நடக்கலாம் என்பதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவா?

தமிழ்க் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் உருவாகலாம் என்று பிரித்தானியா அஞ்சுகின்றதா?

போன்ற கேள்விகள் இதன் மூலம் எழுந்துள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் கருணா கைது செய்யபப்பட்டது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும், ஊடகங்களினூடாகவே தாம் அதனை அறிந்து கொண்டதாகவும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காத் தூதரகம் தெரிவித்தது.

பிரித்தானியாவின் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இக்கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதானது கருணா குடிவரவு, குடியகல்வு விதிகளை மீறியிருப்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

எனினும் அவர் போலியான கடவுச்சீட்டையும், உண்மையான நுழைவு அனுமதியையும் கொண்டிருந்ததாகவும், அதனை அவர் கொழும்பிலேயே பெற்றிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா அரசு மிகவும் இறுக்கமான குடிவரவு கட்டுப்பாடுகளை ஹீத்துரோ வானூர்தி நிலையத்தில் நடைமுறைப்படுத்தி வருவதால் அவர் போலியான நுழைவு அனுமதியைப் பயன்படுத்தி வருவது மிகவும் கடினமானது எனவும் கருணா இரு மாதங்களுக்கு முன்னரே பிரித்தானியாவுக்கு வந்து விட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் கருணாவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் தூதரக அதிகாரிகளுக்கு யாருக்கு அனுமதி வழங்குகின்றோம் என்பது தெரிந்திருக்கலாம் அல்லது அவர்கள் வழமைக்கு மாறாக கவலையீனமாக அதனை வழங்கியிருக்கலாம்.

ஆனால் சிறிலங்காத் தரப்பில் தற்போது எழுப்பப்படும் கேள்வி என்னவெனில் பிரித்தானியா அரசு தற்போது செயலில் இறங்க காரணம் என்ன என்பது தான்?

ஆனால் கருணா பிரித்தானியாவுக்குள் நுழைந்ததில் இருந்து பிரித்தானியா காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்தாகவும் பிரித்தானியாவின் வடக்குப் பகுதியான கெட்போட்செயரில் உள்ள அவரது இல்லமும், ஈஸ்ற்காம் பகுதியில் உள்ள இல்லமும் காவல்துறையினருக்கு தெரியும் எனவும் சிலர் நம்புகின்றனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஈலிங் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் கருணா காணப்பட்டதாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தெரிவத்துள்ளனர். இக்கதை அங்கு பரவியிருந்தது.

இதனிடையே கருணா இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டை பயன்படுத்தி உள்ளாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.